Cinema History
இளையராஜா பாட்டை காப்பி அடிச்சிருக்கேன்!.. என்ன பாட்டுன்னே சொல்லிட்டாரு அந்த இசையமைப்பாளர்!..
தமிழ் சினிமாவின் இசை அரசன் என அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக தன்னுடைய இசையின் மூலம் மக்களை மகிழ்வித்து வருகிறார் இளையராஜா.
இளையராஜாவிற்கு பிறகு பல இசையமைப்பாளர்கள் வந்த பிறகும் கூட அவருக்கு இருக்கும் புகழ் குறையவே இல்லை. கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து சாதித்ததால் இளையராஜா பலருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார் இளையராஜா.
இளையராஜாவின் பாட்டை கேட்டு வந்ததால் சினிமாவில் அவர் பாட்டை காப்பி அடித்து இசையமைத்த இசையமைப்பாளர்களும் உண்டு. அப்படி ஒரு வேலையைதான் இசையமைப்பாளர் பரணி செய்துள்ளார். அதை அவரே ஒரு நேர்க்காணலில் கூறியுள்ளார்.
நினைவெல்லாம் நித்யா என்கிற திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இந்த படத்தில் வரும் பனி விழும் மலர் வனம் என்கிற அந்த பாடல் அப்போது முதல் இப்போது வரை மிகவும் பிரபலமாகும். இந்த நிலையில் இசையமைப்பாளர் பரணிக்கு பிரபு தேவா நடித்த சார்லி சாப்லின் என்கிற திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது.
அதில் அவர் பனி விழும் மலர் வனம் என்கிற அந்த பாடலின் இசையை எடுத்து சற்று மாற்றியமைத்து முதலாம் சந்திப்பில் நான் அறிமுகமானேனே என்கிற பாடலாக அமைத்துள்ளார். இதை அவரே ஒரு நேர்க்காணலில் கூறியுள்ளார்.
