தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகர் பலரும் தயாரிப்பாளராக மாறி உள்ள நிலையில் பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து தற்போது சூரி நடித்து வரும் கொடுக்காளி படத்தை தயாரித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கலந்து கொண்ட மிஷ்கின் பேசிய கருத்து ஒன்று தற்பொழுது சர்ச்சையாகி உள்ளது.
கொடுக்காளி திரைப்படம்
பிரபல காமெடி நடிகரான சூரி தற்போது பல படங்களில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். அந்த வகையில் இரண்டாவதாக முக்கிய கதாபாத்திரத்தில் கொடுக்காளி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை கூழாங்கல் படம் புகழ், வினோத் ராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் கொடுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் விருந்தினராக பிரபல இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டிருந்தார். தற்போது பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் மிஸ்கின் கொடுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சர்ச்சையாக பேசிய மிஷ்கின்
கொடுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட மிஷ்கின் பேசுகையில் இந்த படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்றால் எந்த இடத்திலும் நான் ஆடையின்றி நிற்கவும் தயாராக உள்ளேன். மேலும் ஆடையின்றி குத்து பாடலுக்கு ஆடவும் தயாராக இருக்கிறேன். மேலும் ஆடையின்றி ஆடினால் எப்படி இருக்கும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய மிஷ்கின் இளையராஜாவுக்கு பிறகு வினோத் ராஜ் காலில் விழுந்து இந்த மேடையில் நான் அவரை முத்தமிட தயாராக இருக்கிறேன் என ஓப்பனாக பேசினார். இவர் இவ்வாறு பேசி இருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.






