News
பிரிஞ்ச பிறகு இப்படி தரம் தாழ்ந்து போகணுமா?..ஜெயம் ரவி விவாகரத்து குறித்து மிஸ்கின் பேச்சு..!
ஜெயம் ரவி ஆர்த்தி இருவருக்கும் இடையே இருக்கும் விவாகரத்து குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அதற்கு தகுந்தார் போல அந்த பிரச்சனை தொடர்பாக ஜெயம் ரவியும் ஆர்த்தியும் கூட தொடர்ந்து அவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை கூறி வருகின்றனர். தற்சமயம் ஜெயம்ரவி தான் அதிகமான விஷயங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறார்.
அந்த வகையில் தன்னை தொடர்ந்து ஏமாற்றுவதாகவும் தன்னுடைய சொத்துக்களை பிடுங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் தற்சமயம் நடுரோட்டில் நிற்பதாகவும் தன்னுடைய கார் சாவியையும் பாஸ்போர்ட்டையும் மட்டுமாவது மீட்டு தர வேண்டும் என்றும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து:
இந்த நிலையில் ஆர்த்திக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. இவர்கள் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஜெயம் ரவியின் நலம் விரும்பிகள் பலரும் அவர்கள் இருவரும் சேர்வது தான் நல்லது என்று கூறி வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு இருக்கும் சண்டையை பார்த்தால் அவர்கள் சேர்வது சந்தேகம் தான் என்கின்றனர் நெட்டிசன்கள். இந்த நிலையில் மிஸ்கின் முன்பு பேட்டியில் பேசிய ஒரு விஷயம் வந்து அதிகமாக பரவி வருகிறது. என்னுடைய மனைவி என்னிடம் விவாகரத்து கேட்ட பொழுது நான் அவருக்கு கொடுக்கவில்லை.
என்னுடைய மகளின் நலன் கருதி நான் விவாகரத்து கொடுக்கவில்லை நாங்கள் இருவரும் ஆனால் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் என்றைக்கும் என் மனைவியை பற்றி நான் எங்கும் வெளியில் தவறாக பேசியது கிடையாது. இருவரும் பிரியப் போகிறோம் என்பதற்காக ஒருவரை ஒருவர் மோசமாக பேசிக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் கிடையாது என்று கூறி இருக்கிறார் மிஸ்கின். அவரின் இந்த பேச்சு ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்தோடு ஒத்து போவதால் தற்சமயம் பிரபலம் ஆகி வருகிறது.
