மிஸ்கின் செய்த செயலால் வாழ்க்கை பெற்ற பாடலாசிரியர்!.. உதவி இயக்குனரா இருக்கும்போதே இந்த லெவலா!..

Director Mysskin: தமிழில் அடையாளமாக தெரியும் விதமாக வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் எல்லாமே தனியாக தெரியும் விதத்தில் இருக்கும்.

தற்சமயம் அவர் நடிகராகவும் கலக்கி வருகிறார். இயக்குனராக இருந்ததை விடவும் நடிகராக அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கொண்டுள்ளன. இருந்தாலும் இயக்குனராகவும் சில படங்களை இயக்கி வருகிறார் மிஸ்கின். தற்சமயம் விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெயின் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மிஸ்கின்.

இயக்குனராவதற்கு முன்பு தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் உதவி இயக்குனராக பணிப்புரிந்துள்ளார் மிஸ்கின். அப்படியாக பணிப்புரியும்போது வாலிக்கு எதிராக அவர் செய்த சம்பவம் ஒன்று ஒரு கவிஞரின் வாழ்க்கையையே மாற்றியுள்ளார். பிரபல பாடலாசிரியர் கபிலன் அந்த சமயத்தில் வாய்ப்பு தேடி வந்தார்.

mysskin
mysskin
Social Media Bar

ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் யூத் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார் மிஸ்கின். அந்த சமயத்தில்தான் கபிலனும் வாய்ப்பு தேடி வந்தார். யூத் திரைப்படத்தின் பாடல்களுக்கு கவிஞர் வாலிதான் பாடல் வரிகளை எழுதினார். இந்த நிலையில் கபிலனும் அந்த திரைப்படத்தில் பணிப்புரிந்து வந்தார்.

அட ஆள்தோட்ட பூபதி நானடா என்கிற ஒரு பாடல் அந்த படத்தில் பெரும் வெற்றி பெற்ற ஒரு பாடலாகும். இந்த பாடலுக்கு இசையமைக்கும்போது கபிலன் அந்த பாடலுக்கு பாடல் வரிகளை எழுதி கொடுத்தார். அந்த வரிகள் இயக்குனருக்கு பிடிக்கவில்லை என்றாலும் அது மிஸ்கினுக்கு பிடித்திருந்தது.

எனவே மிஸ்கின் யாருக்கும் தெரியாமல் வாலி எழுதிய பாடல் வரிகளை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக கபிலனின் வரிகளை வைத்தார். அந்த வரிகள்தான் பாடலிலும் வந்தது. பிறகு அது கபிலனுக்கு பெரும் பட வாய்ப்புகளை பெற்று தந்தது.