Connect with us

எங்க படத்தோட அட்டர் காபி.. நான் ஈ பட தயாரிப்பாளர் அனுப்பிய நோட்டிஸ்.. 

Tamil Cinema News

எங்க படத்தோட அட்டர் காபி.. நான் ஈ பட தயாரிப்பாளர் அனுப்பிய நோட்டிஸ்.. 

Social Media Bar

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகி அதிக வரவேற்பு பெற்ற திரைப்படம் நான் ஈ. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகுதான் ராஜமௌலிக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தன.

நான் ஈ திரைப்படத்தில் அந்த ஈயை உருவாக்குவதற்கு அதிக சிரமப்பட்டு இருந்தார் ராஜமௌலி. ஒரு சின்ன கிராஃபிக் குழுவை வைத்துக்கொண்டு அந்த ஈயின் வடிவமைப்பை அவர்கள் உருவாக்கியிருந்தனர். இந்த நிலையில் மலையாளத்தில் லவ்லி என்கிற ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படமும் ஈயை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம் கொண்டுள்ளது. இந்த நிலையில் நான் ஈ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்சமயம் லவ்லி திரைப்பட குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தன்னுடைய படத்தில் வரும் அதே வடிவமைப்பை காப்பியடித்து லவ்லி திரைப்படத்தில் பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். நான் ஈ தயாரிப்பாளர்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த லவ்லி பட குழுவினர் படத்தில் வரும் நடிகையின் முகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அந்த ஈயின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று பதில் அளித்து இருக்கின்றனர்.

இருந்தாலும் சட்ட ரீதியாக இது குறித்து நான்கு தயாரிப்பாளர் வழக்கு தொடரலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top