கில்லி 2வுக்கு ப்ளான் பண்ணுனோம்!.. விஜய் முடிவால் எடுக்க முடியாம போயிடுச்சு!.. கில்லி நடிகர் ஓப்பன் டாக்!.

விஜய் நடித்த திரைப்படங்களில் வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலமான திரைப்படம் கில்லி. அவ்வளவு காமெடியான அதே சமயம் எண்டர்டெயின்மெண்டான ஒரு கதாபாத்திரத்தில் விஜய்யை இப்போது வரும் படங்களில் பார்ப்பது அரிது.

அதனால்தான் விஜய்யின் கில்லி திரைப்படம் மறு வெளியீடு ஆனதும் அதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் அவருடன் நண்பர்களாக நடித்த அனைவருக்குமே படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும்.

அந்த வகையில் நடிகர் நாகேந்திர பிரசாத்திற்கும் முக்கிய கதாபாத்திரம் இருக்கும். இவர் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவாவின் தம்பி ஆவார். கில்லி திரைப்படத்தில் ஒரு சண்டை காட்சியில் கூட இவர் செமையாக கலக்கியிருப்பார்.

ghilli
ghilli
Social Media Bar

சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் ”நான் மாஸ்டர் திரைப்படத்தின்போது விஜய்யை சந்தித்தப்போதே கில்லி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமே எனக் கேட்டேன். விஜய்யும் அதற்கு பார்க்கலாம் என கூறியிருந்தார். ஆனால் பிறகு தற்சமயம் அவர் அரசியலுக்கு சென்ற காரணத்தினால் கில்லி திரைப்படம் குறித்து பேச முடியாமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளார்.

ஒருவேளை கில்லி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது என்றால் அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே இருக்கும்.