அண்ணா அளவுக்கு எனக்கு மரியாதை இல்ல.. வீட்லக்கூட இப்படிதான் நடத்துறாங்க.. மனம் வருந்திய பிரபுதேவா தம்பி…

தமிழில் டான்ஸ் மாஸ்டர் என்று கூறினாலே எல்லோருக்கும் என் நினைவுக்கு வர்பவர் பிரபுதேவா தான் மைக்கேல் ஜாக்சனின் அனைத்து டான்ஸ்களையும் தமிழில் ஆட கூடியவராக பிரபுதேவா இருந்தார். அதேபோல நிறைய வித்தியாசமான நடனங்களையும் அவரால் ஆட முடியும்.

இளமை காலங்களில் இருந்து இப்பொழுது வரை நடனமாடுபவராக பிரபுதேவா இருந்து வருகிறார். நிறைய படங்களுக்கு அவர் நடன கலைஞராகவும் இருந்திருக்கிறார். அவருடைய குடும்பத்தில் எல்லோருமே டான்ஸ் மாஸ்டர்கள்தான் என்றாலும் கூட பிரபுதேவா அளவிற்கு மற்றவர்களுக்கு வரவேற்புகள் கிடைக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணம் பிரபுதேவா தொடர்ந்து கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துக் கொண்டார் ஆனால் அவரது தம்பிகள் அந்த மாதிரி செய்யவில்லை. அதனால் அவர்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

prabhu deva

Social Media Bar

பிரபுதேவா:

இந்த நிலையில் இது குறித்து பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். இவர் தமிழ் கன்னடம் என்று இரண்டு மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் சில வெற்றியும் கொடுத்திருக்கின்றன.

இருந்தாலும் பிரபுதேவா அளவிற்கு இவர் பிரபலம் அடையவில்லை இவர் பேட்டியில் கூறும் பொழுது என்னதான் நாம் பிரபலம் என்றெல்லாம் கூறினாலும் காசை வைத்து தான் இங்கு மரியாதை இருக்கிறது. எங்கள் வீட்டிலேயே எடுத்துக் கொண்டால் அண்ணாவிற்கு இருக்கும் மரியாதை எங்களுக்கு இருக்காது.

என்னதான் நான் வீட்டில் ஒரு ஆள் என்றாலும் கூட அந்த மரியாதை எனக்கு கிடைக்காது என்று கூறியிருக்கிறார் நாகேந்திர பிரசாத்.