Cinema History
நாகேஷ் அடிச்ச அந்த கவுண்டர்ல மானமே போயிடுச்சு!.. ஜெயராம்க்கு நடந்த சம்பவம்!..
தமிழில் உள்ள பழம்பெரும் காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். ஒல்லியான தேகத்தைக் கொண்டிருந்தாலும் கூட அதை வில்லை போல வளைத்து நடனம் ஆடுவதிலும் சரி காமெடிகளும் சரி தனது உடலை சரியாக பயன்படுத்தக் கூடியவர் நடிகர் நாகேஷ்.
மிகவும் கடினமான காட்சிகளை கூட எளிதாக நடிப்பவர் என்பதால் ஒரு காலகட்டத்தில் நாகேஷின் காமெடிக்காகவே திரைப்படங்கள் ஓட துவங்கின. சில பெரும் பிரபலங்கள் கூட நாகேஷை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அவருக்கு ரசிக கூட்டம் உருவானது என்று கூறலாம்.
கமல்ஹாசன் நாகேஷ் மீது மிகப்பெரும் மரியாதை கொண்டவர். தனது திரைப்படங்களில் தொடர்ந்து நாகேஷை அவர் நடிக்க வைத்துக் கொண்டிருந்தார். மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், அபூர்வ சகோதரர்கள், காதலா காதலா இன்னும் எத்தனையோ திரைப்படங்களில் கமலோடு நாகேஷை பார்க்க முடியும்.
திரைப்படங்களின் படப்பிடிப்பின் பொழுது அந்த காட்சியில் நாகேஷ் தனக்குத் தோன்றும் வசனத்தைக் கூறி சிறப்பான ஒரு காமெடியை உருவாக்கி விடுவார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் குள்ளமாக இருக்கும் கமலை தூக்கி வரும் பொழுது என்னையா பாதி தான் இருக்கிறது மீதி எங்கே என்று ஒரு கேள்வியை கேள்வியை நாகேஷ் கேட்பார்.
அது படத்தின் திரைக்கதையில்இல்லாத வசனம் ஆகும். அதேபோல நடிகர் ஜெயராமிற்கும் ஒரு விஷயம் நடந்துள்ளது. பஞ்சதந்திரம் திரைப்படத்தில் ஜெயராம், நாகேஷ் ,கமல் எல்லோரும் சேர்ந்து நடித்திருந்தனர். அதில் ஒரு காட்சியில் ஒன்னுக்கு வருகிறது என்று கூறி வண்டியை நிறுத்த சொல்லுவார். நாகேஷ்.
வண்டியை நிறுத்தும்பொழுது நாகேஷ் தடுமாறுவதை பார்த்து ஜெயராம் அவரை போய் பிடித்துக் கொள்ளவா என்று கேட்பார். அப்பொழுது நாகேஷ் 60 வருஷமாக நான் தானே புடிச்சிக்குறேன் என்று இரட்டை அர்த்தத்தில் பேசி கலாய்த்து விடுவார்.
அந்த வசனமும் படத்தில் எழுதாத வசனமாகும். அப்படியே பொது இடத்தில் வைத்து என்னை கலாய்த்து விட்டார் நாகேஷ் என்று அந்த நிகழ்வு குறித்து ஜெயராம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்