Connect with us

முக்கிய புள்ளி கொடுத்த தொல்லை.. அதனால் நக்மா எடுத்த முடிவு.. புட்டு புட்டு வைத்த பத்திரிக்கையாளர்..!

Tamil Cinema News

முக்கிய புள்ளி கொடுத்த தொல்லை.. அதனால் நக்மா எடுத்த முடிவு.. புட்டு புட்டு வைத்த பத்திரிக்கையாளர்..!

Social Media Bar

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்த பிரபல நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்தவராக நடிகை நக்மா இருந்தார்.

குறுகிய காலத்திலேயே காலகட்டங்களிலேயே நக்மாவிற்கு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து சத்யராஜ் கார்த்திக் என்று துவங்கி நடிகர் ரஜினிகாந்த் வரை பல முக்கியமான நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

அதே சமகாலத்தில் நக்மா குறித்த கிசுகிசுகளும் அதிகமாக இருந்திருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் முக்கியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது முந்தைய காலகட்டங்களில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

வேற்று மாநிலத்தை சேர்ந்த நடிகர்கள் நடிகைகள்தான் இங்கு வந்து நடிப்பார்கள். அப்படி நடிக்கும் போது அவர்களுக்கு அரசியல் புள்ளிகளாலும் விஐபிகளாலும் தொடர்ந்து தொந்தரவு என்பது இருந்து கொண்டிருக்கும்.

அதிலிருந்து தப்பிக்கதான் அவர்கள் நடிகர்கள் மீது காதல் கொள்வதை செய்கின்றனர். ஒருவேளை சினிமாவில் இருக்கும் நடிகரையோ அல்லது வேறு பிரபலத்தையோ அவர்கள் காதலிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த மாதிரியான சீண்டல்கள் இருக்காது.

அதனால்தான் நடிகை குஷ்பூ ஆரம்பத்தில் நடிகர் பிரபுவை காதலித்து வந்தார். அதேபோல நடிகை நக்மாவும் சரத்குமாரை காதலித்ததாக பேச்சுக்கள் இருந்தன. ஆனால் உண்மையில் நடிகை நக்மா சினிமாவில் இருந்த காலகட்டம் முழுவதுமே எந்த ஒரு நடிகரையுமே காதலிக்கவில்லை என்று கூறி இருக்கிறார் சபிதா ஜோசப்.

To Top