Connect with us

வேட்டியை துவைக்க ஆர்டர் போட்டு தண்ணீர் வரவழைத்த நம்பியார்!.. பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா!..

nambiar

Cinema History

வேட்டியை துவைக்க ஆர்டர் போட்டு தண்ணீர் வரவழைத்த நம்பியார்!.. பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா!..

Social Media Bar

பழைய வில்லன் நடிகர்களில் சிலரை சின்ன பிள்ளைகளுக்கு பூச்சாண்டி என காட்டி சோறு ஊட்டலாம். அந்த அளவிற்கு டெரராக இருந்த ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நம்பியார். அப்போது நம்பியார் வில்லனாக நடித்ததால் பல பிரச்சனைகளை சந்தித்தார்.

முக்கியமாக எம்.ஜி.ஆருடன் வில்லனாக நடித்த காரணத்தால் தொடர்ந்து எம்.ஜி.ஆர் ரசிகர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி வந்தார் நம்பியார். ஆனால் நிஜ வாழ்க்கை என எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லவர் நம்பியார் என்கின்றனர் அவருடம் பழகியவர்.

nambiyar
nambiyar

எம்.ஜி.ஆருக்கு கூட பெண்கள் விஷயங்களில் சினி துறையில் சில கிசுகிசுக்கள் உண்டு, ஆனால் நம்பியாருக்கு அப்படி கூட எந்த ஒரு பழக்கமும் கிடையாது. அதே சமயம் கிராமங்களுக்கு படப்பிடிப்புகளுக்கு சென்றால் அங்கு நம்பியாருக்கு தண்ணீர் கூட தர மாட்டார்களாம்.

ஐயப்ப சாமியின் பெரும் பக்தராக இருந்தார் நம்பியார். இறக்கும் வரையில் அவர் சபரிமலைக்கு மாலை போட்டு சென்று வந்துக்கொண்டிருந்தார். இந்த மாலை போட்டிருக்கும் சமயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பாராம் நம்பியார். பெரும்பாலும் திரைப்படங்களில் கூட நடிக்க மாட்டாராம்.

இந்த நிலையில் அந்த சமயத்தில் பக்கத்தில் தனது நண்பரிடம் கிணற்று தண்ணியை கேட்டு வாங்கி அதில்தான் வேட்டியை துவைப்பாராம் நம்பியார். இதற்காகவே  சில வீடுகள் தாண்டி தினசரி நம்பியார் வீட்டிற்கு தண்ணீர் வந்துக்கொண்டுள்ளன.

ஏன் இப்படி செய்கிறார் என அவரிடம் அவரது நண்பர் கேட்டப்பொழுது சபரி மலை சாமிக்கு விரதம் இருந்து கட்டுற வேட்டி இது. இதை துணி துவைப்பவர்களிடம் கொடுத்தால் அவர்கள் எந்த தண்ணீரில் அலசுவார்களோ அதனால்தான் தினமும் சுத்தமான தண்ணீரில் இதை துவைத்து வருகிறேன் என கூறியுள்ளார் நம்பியார்.

To Top