News
இனி அந்த நிறுவனத்தோடு பணிப்புரிய மாட்டேன்!.. குக் வித் கோமாளி சீசன் 5 இல் வெளியேறிய பிரபலம்… இதுதான் காரணம்!.
விஜய் டிவியில் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் என்றால் அதில் ஒன்று பிக் பாஸ் மற்றொன்று குக் வித் கோமாளி. குக் வித் கோமாளி நிகழ்ச்சி எக்கசக்கமான வரவேற்பை பெற்ற தொடராக இருந்து வருகிறது.
தொடர்ந்து அதன் ஐந்தாவது சீசன் சமீபத்தில் துவங்கப்பட்டது. இந்த ஐந்தாவது சீசன் துவங்குவதில் இருந்தே நிறைய பிரச்சனைகள் இருந்தன. ஏற்கனவே அதில் ஜட்ஜ் ஆக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மீடியா மெஷன் நிறுவனத்திற்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
விஜய் டிவிக்கு வந்த பிரச்சனை:
இதற்கு நடுவே எப்படியோ ஒரு வழியாக பலரைத் திரட்டி குக் வித் கோமாளி சீசன் 5 துவங்கப்பட்டது. ஆனால் அது துவங்கிய சில நாட்களிலேயே அதில் கோமாளியாக வந்த நாஞ்சில் விஜயன் இந்த நிகழ்ச்சியிலிருந்து அவராகவே வெளியேறிவிட்டார்.

இவர் ஏற்கனவே பல காலங்களாக விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் இனி இந்த நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
நிகழ்ச்சியை விட்டு சென்ற பிரபலம்:
ஏன் இவ்வளவு கோபமாகிவிட்டார் என்று இது குறித்து ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கும் பொழுது உண்மையில் எனக்கு அங்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
நான் பேசும் பழ காமெடிகளை எடிட் செய்து அந்த ஷோவில் நீக்கி விடுகிறார்கள். இது குறித்து யாரிடம் கேட்டாலும் எனக்கு சரியான பதிலும் கொடுப்பதில்லை. சரி அடுத்த எபிசோடிற்க்கு அழைப்பார்கள் என்றால் அதற்கும் பதில் இல்லை.

அவர்களுக்கு தேவைப்படும் பொழுது மட்டும் அழைத்துக் கொள்கிறார்கள் மற்ற நேரங்களில் அந்த எபிசோடுகளுக்கு நாம் தேவையா இல்லையா என்பதை கூட அவர்கள் கூறுவதில்லை. எனவேதான் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என்று கூறியிருக்கிறார் நாஞ்சில் விஜயன்.
தற்சமயம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிறுவனம் மீடியா மிஷன் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்பதுதான் மறைமுகமாக அவர் வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது.
