Connect with us

16 வயது பையனுடன் சிம்ரனுக்கு இருந்த உறவு.. வாழ்க்கையை கெடுத்த அந்த நபர்!..

simran movie

Cinema History

16 வயது பையனுடன் சிம்ரனுக்கு இருந்த உறவு.. வாழ்க்கையை கெடுத்த அந்த நபர்!..

Social Media Bar

1997 ஆம் ஆண்டு வெளியான ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். முதல் திரைப்படத்திலேயே சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் எல்லாம் அவ்வளவாக தமிழ் பிரபலங்களுக்கே கிடைப்பதில்லை.

ஆனால் வட இந்தியாவில் செய்தி தொகுப்பாளராக இருந்து வந்த சிம்ரனுக்கு தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்திலேயே சிவாஜி கணேசனுடன் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

அதன் மூலம்தான் நடிப்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதற்கு பிறகு சிம்ரனுக்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி என்று நிறைய திரைப்படங்களில் சிம்ரன் நடித்திருந்தார்.

தமிழில் வந்த மார்க்கெட்:

ஆனால் இவ்வளவு பிரபலமாக இருந்த சிம்ரனுக்கு 2005 கால கட்டங்களில் கொஞ்சம் வாய்ப்புகள் குறைவாக இருந்தது. இந்த நிலையில் அவர் தேர்ந்தெடுத்த தவறான கதை ஒன்று அவர் வாழ்க்கையில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது.

2005 ஆம் ஆண்டு சிம்ரன் நடிப்பில் கிச்சா வயது 16 என்கிற திரைப்படம் ஒன்று வெளியானது. இந்த திரைப்படத்தில் 16 வயது சிறுவனுக்கும் சிம்ரனுக்கும் இடையே உறவு இருப்பதாக கதைகளம் அமைந்திருந்தது.

இந்த திரைப்படத்தை இயக்கத் துவங்கும் பொழுது இப்படியான ஒரு கதை என்பதே சிம்ரனுக்கு தெரியவில்லை. அவரிடம் சரியாக வேறு கதை ஒன்றைக் கூறி இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர்.

வாழ்க்கையை கெடுத்த படம்:

ஆனால் நடிக்க நடிக்க இதன் கதை தவறாக இருப்பதை அறிந்த சிம்ரன் பாதியிலேயே இந்த திரைப்படத்திலிருந்து விலகி இருக்கிறார். இருந்தாலும் கூட படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே எடுத்த காட்சிகளை வைத்து படத்தை தயார் செய்து வெளியிட்டு விட்டார்.

அதனை தொடர்ந்து சிம்ரனின் மார்க்கெட் மொத்தமாக வீழ்ந்தது. அதனால் சிம்ரன் மிகுந்த கோபத்திற்கு உள்ளானார் என்று ஒரு பேட்டியில் கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top