Movie Reviews
காலா மாதிரியே நில அரசியலை பேசும் Narivetta.. Movie Review…
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் நரிவேட்ட. இந்த திரைப்படத்தை இயக்கியவர் அனுராஜ் மனோகர் என்கிற இயக்குனர் ஆவார்.
10 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 31 கோடிக்கு ஓடி நல்ல வசூலை கொடுத்தது. படத்தின் கதைப்படி வர்கீஸ் பீட்டர் என்கிற கதாநாயகன் பல காலமாகவே அரசு வேலை தேடி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கேரள போலீசில் கான்ஸ்டபிளாக வேலை கிடைக்கிறது.
ஆரம்பத்தில் அந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட அப்போதைய சூழ்நிலையில் அவருக்கு வேற வழி இல்லை என்கிற நிலை ஏற்படுகிறது. எனவே பெரிய அளவிலான ஒரு அரசு வேலை கிடைக்கும் வரையில் போலீஸாக பணி புரியலாம் என்று அந்த வேலையில் சேருகிறார்.
ஆரம்பத்தில் இருந்து வர்கீஸ் கதாபாத்திரம் கொஞ்சம் கடுமையான கதாபாத்திரமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் மக்களை அடிப்பவராக இருக்கிறார். இந்த நிலையில் பழங்குடியின மக்கள் தங்களுடைய நிலத்திற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தப் பகுதி வனவிலங்குகள் வாழும் பகுதி என்பதால் அந்தப் போராட்டத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக போலீஸ் படை அனுப்பப்படுகிறது. அந்த படையில் வர்கீஸும் செல்கிறார்.
இந்த நிலையில் அந்த மக்களை விரட்டுவதற்காக போலீஸ் செய்யும் அநியாயங்கள் மற்றும் அவர்கள் செய்யும் அரசியல் இந்த விஷயங்கள் எல்லாம் வர்கீஸ் கதாபாத்திரத்தை வெகுவாக பாதிக்கிறது.
இந்த நிலையில் இந்த செயலுக்கு எதிராக அவர் என்ன செய்யப் போகிறார் என்பதாக படத்தின் கதை நகர்கிறது இதன் வழியாக படத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலம் சார்ந்த அரசியல் போன்ற விஷயத்தை பேசி இருக்கின்றனர்.
