மருமகன் மட்டும் இல்லாமல் இப்ப மாமனாரிடம் அடி.. நயன்தாராவுக்கு எல்லா பக்கமும் பிரச்சனை..!

தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு பெரிய நடிகர்களின் படங்களிலேயே வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அதே சமயம் பெண் கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும், கதாநாயகனே இல்லாத கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா. அதன் மூலம் தனக்கு இருக்கும் மார்க்கெட் மற்றும் தனித்தன்மையை மக்கள் மத்தியில் நிலைநிறுத்த நினைக்கிறார் நயன்.

ஆனால் அதில் பிரச்சனை என்னவென்றால் சமீபக்காலமாக நயன் தாரா அப்படி நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியைதான் கொடுத்துள்ளன. அதிலும் இறுதியாக வெளியான அன்னப்பூரணி திரைப்படம் மோசமான தோல்வியை கொடுத்தது.

nayanthara
nayanthara
Social Media Bar

இருந்தாலும் கூட வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார் நயன் தாரா. ஏனெனில் அதன் மூலம்தான அவரது மார்க்கெட்டை அவர் அதிகரித்துக்கொள்ள முடியும்.

இதற்கு நடுவே நயன் தாராவின் ஆவணப்படம் குறித்து நிறைய சர்ச்சைகள் சமீப காலமாக வெடித்து வந்தன. அந்த வகையில் தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை நயன் தாரா அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருந்தார்.

அதற்காக 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்சமயம் சந்திரமுகி படத்தின் தயாரிப்பு நிறுவனமும் நயன் தாரா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏனெனில் அவர்களது பட காட்சியையும் நயன் பயன்படுத்தியிருக்கிறார். இதனையடுத்து ஏற்கனவே மருமகன் தனுஷ் மூலமாக நயன் தாராவுக்கு பிரச்சனை வந்தது. இப்போது மாமனார் ரஜினி மூலமாகவும் பிரச்சனை வந்துள்ளது போல என கூறி வருகின்றனர்.