Tamil Cinema News
தனுஷின் பாதையில் செல்கிறதா நெட்ஃப்ளிக்ஸ்.. நயன்தாராவுக்கு வந்த புதிய தொல்லை..!
தனுஷ் நயன்தாரா இருவருமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிரபலங்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாக தான் இருக்கின்றன.
இருந்தாலும் கூட இப்பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை நயன்தாரா நடித்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஆவணப்படம்தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது.
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாரா தனுஷிடம் ஒப்புதல் வாங்காமலேயே இந்த ஆவணப்படத்திற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்கிற வகையில் தனுஷ் வழக்கு தொடர்ந்தே இருக்கிறார்.
நெட்ஃப்ளிக்ஸ் முடிவு:
இந்த நிலையில் சென்னை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் சினிமா வட்டாரத்தினர் கூறும் பொழுது தனுஷ் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்று கூறி வருகின்றனர் எனவே அவர் கேட்ட 10 கோடி நஷ்டஈடு நயன்தாரா கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த வழக்கில் நெட்ஃப்ளிக்ஸ் மீதும் பழி சுமத்தி இருக்கிறார் தனுஷ். எனவே இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 30 கோடி ரூபாய் கொடுத்து தான் இந்த ஆவண படத்தை நயன்தாராவிடம் வாங்கி இருக்கிறது எனவே இதில் சிக்கல் ஏற்படும் நிலையில் அந்த ஆவண படத்தை நீக்குவதோடு மட்டும் அல்லாமல் நெட்ஃப்ளிக்ஸ் நயன்தாராவிடம் நஷ்ட ஈடு கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இதனால் நயன்தாரா இருவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்கக்கூடிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்