Connect with us

பொது இடத்தில் உடை மாற்றிய நயன்தாரா!.. இதுதான் காரணமாம்..

Cinema History

பொது இடத்தில் உடை மாற்றிய நயன்தாரா!.. இதுதான் காரணமாம்..

Social Media Bar

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் பெரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் நயன்தாரா பெரும் பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கும் கதாநாயகியாக மாறிவிட்டார்.

ஆரம்பத்தில் ஐயா திரைப்படத்தின் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அப்போது நடித்த இரண்டு திரைப்படங்களிலுமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தன.

மேலும் இரண்டிலுமே புடவை கட்டிக்கொண்டுதான் நடித்திருந்தார் நயன்தாரா. இந்த நிலையில் அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் கஜினி.

கஜினி படத்தில் நடந்த சம்பவம்:

கஜினி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது ஒரு காட்சியில் வில்லன்கள் அவரை துரத்துவார். அவர் வில்லன்களுக்கு பயந்து ஓடுவார். அந்த காட்சியில் நயன்தாரா போட்டிருந்த சட்டை மிகவும் லூசாக இருந்ததால் அந்த காட்சி பார்ப்பதற்கு ஆபாசமாக இருந்துள்ளது.

இதனால் நயன்தாரா டைட்டான உள்ளாடை அணிந்து அதன் மேல் டைட்டான சட்டையை அணிந்து வர வேண்டும் என கூறிவிட்டனர். ஆனால் அப்போது நயன் தாராவிற்கு கேரவன் வசதி கூட கிடையாது. இப்போது உடையை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வது என கூறியுள்ளார் நயன் தாரா.

அதற்கு பிறகு அங்கு நின்ற ஒரு காரின் பின்பக்கம் போய் நின்று தனது ஆடையை மாற்றிக்கொண்டு நடிக்க வந்துள்ளார் நடிகை நயன் தாரா. அந்த அளவிற்கு நடிப்பின் மீது அவர் ஈடுபாடு கொண்டவர் என்கிறார் ஏ.ஆர் முருகதாஸ்.

To Top