News
அட்ஜெஸ்ட்மெண்டுக்கு வாங்க.. எல்லாம் பண்ணிக்கலாம்!.. நயன்தாரா மீது ஆசை வைத்த பிரபல இயக்குனர்..!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும் பட்ஜெட் படங்களாகதான் இருக்கும்.
அதே போல தற்சமயம் நயன்தாராவின் சம்பளம் என்பதும் அதிகமாகதான் இருக்கிறது. தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்படுகிறார் நயன்தாரா. கிட்டத்தட்ட இவர் 10 கோடி ரூபாயை ஒரு படத்திற்கான சம்பளமாக வாங்குகிறாராம்.

வந்த பட வாய்ப்புகள்:
இந்த நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நயன்தாரா. ஆனால் அவர் வாங்கும் சம்பளம் அளவிற்கு அவருக்கு மார்க்கெட் இருக்கிறதா என்றால் அது சந்தேகம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் அன்னப்பூரணி என்கிற திரைப்படம் வெளியாகியிருந்தது.
அது பெரும் தோல்வியை கண்டிருந்தது. இந்த நிலையில் நயன்தாராவும் கூட சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகளில் சிக்கியுள்ளார்.

கடுப்பான நயன்தாரா:
ஆமாம் தமிழ் சினிமாவில் அவர் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த காலக்கட்டங்களில் பிரபலமான இயக்குனர் ஒருவர் அவரது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை தருவதாகவும் அதற்கு தன்னுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துக்கொள்ளவ் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அதற்கு தனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் கிடைக்க வேண்டும் என்றால் அந்த வாய்ப்பே வேண்டாம் என பகீரங்கமாக தெரிவித்துள்ளார் நயன்தாரா. இந்த பேட்டியானது தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
