Connect with us

வாய்ப்புக்கே வழி இல்லாமல் இருக்காங்க.. அதை பண்ண வாய்ப்பில்லை.. நயன்தாரா குறித்து கூறிய பிரபலம்.!

Tamil Cinema News

வாய்ப்புக்கே வழி இல்லாமல் இருக்காங்க.. அதை பண்ண வாய்ப்பில்லை.. நயன்தாரா குறித்து கூறிய பிரபலம்.!

Social Media Bar

சமீப காலங்களாகவே நடிகை நயன்தாராவிற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக ஒரு வெற்றிப் படம் என்பதே அமையவில்லை. பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

போன வருடம் அவரது நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. மதத்தை கேலி செய்யும் விதமாக படத்தில் காட்சிகள் இருந்ததாக கூறி நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து அந்த திரைப்படத்தை நீக்கிவிட்டனர்.

அந்த அளவிற்கு அன்னபூரணி திரைப்படம் பெரும் பிரச்சனையை உருவாக்கியது. இதனை தொடர்ந்து அடுத்து நயன்தாரா கண்டிப்பாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியானது. மூக்குத்தி அம்மன் திரைப்படம் நயன்தாரா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்று கூறலாம். ஆனால் அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு நடிகர் ஆர்.ஜே பாலாஜியின் நகைச்சுவையும் முக்கிய காரணமாக இருந்தது.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்தார் நயன்தாரா. அதற்கு இயக்குனராக சுந்தர் சி இருக்க வேண்டும் என்று சுந்தர்சியிடம் பேசி இருந்தார். சுந்தர் சியும் அதற்கு ஒப்பு கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சுந்தர் சி தற்சமயம் நயன்தாரா கால் சீட் கொடுக்காத காரணத்தினால் அவருடன் சண்டை இட்டுக்கொண்டு சென்று விட்டார். விஷால் திரைப்படத்தை தான் அடுத்து சுந்தர் சி இயக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் இருந்தன.

இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவை பொறுத்தவரை இப்பொழுது நயன்தாராவிற்கும் மார்க்கெட் என்பதே இல்லை அதனால் அவருக்கு வரும் படங்களையும் நிராகரிக்கும் அளவிற்கு நயன்தாரா இப்பொழுது இல்லை.

சொல்லப்போனால் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வெற்றியின் மூலமாகத்தான் நயன்தாரா மீண்டும் சினிமாவில் நிற்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

அப்படி இருக்கும் பொழுது சுந்தர் சி மாதிரியான ஒரு பெரிய இயக்குனரிடம் அவர் சண்டையிட்டு செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை கண்டிப்பாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சீக்கிரமே துவங்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

To Top