என்னை மன்னிச்சிடுங்க மக்களே.. வடக்கன்ஸிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..

Nayanthara : தற்சமயம் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் ஆனதன் மூலமாக வடக்கு பக்கம் அதிக சர்ச்சையை கிளப்பி இருந்தது. படம் திரையரங்குகளில் ஓடும்பொழுது கூட தென் இந்தியாவில் மக்கள் மத்தியில் பெரிதாக அது எந்த ஒரு அதிர்வையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் ஹிந்தியில் அது பலருக்கும் கடவுளை இழிவுபடுத்தியதாக தோன்றியதால் படம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். இதனால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமே அந்த படத்தை ஓடிடியிலிருந்து எடுத்து விட்டது இந்த நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்டு நயன்தாரா ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறும்பொழுது கணத்த இதயத்துடன் இதை எழுதுகிறேன். அன்னப்பூரணி திரைப்படத்தை வணிக நோக்கத்திற்காக மட்டுமில்லாமல் நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். அதன் மூலமாக நேர்மறையான கருத்துக்களையே பரப்ப நினைத்தோம். ஆனால் பிறகுதான் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு என எழுதியிருக்கும் நயன் தாரா ஜெய் ஸ்ரீ ராம் என அந்த அறிக்கையை துவங்கியுள்ளார்.

nayanthara
nayanthara
Social Media Bar

இந்தியாவை பொறுத்தவரை தென் இந்தியாவில் ராமரை வணங்குபவர்கள் குறைவுதான். இங்கு ராமர் வழிபாடு அதிகமாக கிடையாது என்று கூறலாம் ராமர் வழிபாடு அதிகமாக வட இந்தியாவில் தான் உள்ளது எனவே வட இந்தியர்களிடம்தான் நயன்தாரா மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது இதனை அடுத்து வட இந்தியர்கள் நயன் தாராவை பாராட்டி வந்தாலும் தென் இந்தியர்கள் அவரை சங்கி என கூறி ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.