Tamil Cinema News
தமிழ் சினிமா வரலாற்றுலேயே முதன் முதலாய்.. நயன்தாரா செய்த சாதனை.!
நடிகை நயன் தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வரும் நடிகையாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் நடிகையாக நயந்தாரா தான் இருந்து வருகிறார். அந்த அளவிற்கு அவரது மார்க்கெட் என்பது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தற்சமயம் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை நயன் தாரா. மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கு பின்னால் பல பிரச்சனைகள் நடந்தது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் பாகத்தை வேல்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது.
ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமின்றி படத்தின் கதையிலும் பணிப்புரிந்திருந்தார். ஹிந்தியில் வெளியான பி.கே என்கிற திரைப்படத்தின் மீது கொண்ட ஈடுப்பாட்டால் இந்த படத்தை இயக்கினார் ஆர்.ஜே பாலாஜி.
இந்த நிலையில் அடுத்து ஒரு அம்மன் படமாக மாசாணி என்கிற திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் ஆர்.ஜே பாலாஜி. அந்த திரைப்படத்தை அவர் சொந்த தயாரிப்பில் உருவாகக் நினைத்தார். அதனால் நயன் தாராவுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைக்க முடியாது என அவர் திரிஷாவிடம் இதுக்குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த நயன் தாரா வேல்ஸ் நிறுவனத்திடம் பேசி வேக வேகமாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் முதல் லுக் வெளியானப்போது அதன் இயக்குனர் யார் என்று கூட முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை இயக்குகிறார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது முக்குத்தி அம்மன் 2 திரைப்படம். கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் எந்த ஒரு திரைப்படமும் இதுவரை 100 கோடி பட்ஜெட்டில் உருவானது இல்லை.
எனவே இது நயன் தாராவுக்கு தமிழ் சினிமாவில் பெரும் சாதனை என கூறப்படுகிறது,
