News
சண்டைக்காரியாக மாறிய நயன்தாரா… வேதனையில் இருக்கும் குடியிருப்புகள்.. அட கொடுமையே..
தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன் தாரா. தற்சமயம் அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒரு நடிகை இவ்வளவு சம்பளம் வாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல.
ஏனெனில் இதுவரை தமிழ் சினிமாவில் பணிப்புரிந்த எந்த ஒரு நடிகையும் நயன் தாரா வாங்கும் சம்பளத்தை வாங்கவில்லை என்றே கூற வேண்டும். திருமணத்திற்கு பிறகும் கூட தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார் நயன் தாரா.

இந்த நிலையில் அவரது மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காக தொடர்ந்து இளம் நடிகர்கள் திரைப்படங்களில் அவர்களுக்கு கதாநாயகியாக நடிக்க துவங்கியுள்ளார். அடுத்து நடிகர் கவினுக்கு இவர் ஜோடியாக நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் உள்ளன.
நயன் தாரா கொடுக்கும் தொல்லை:
இதற்கு நடுவே ஓய்வு நேரங்களில் தனது குழந்தைகளுடன் விளையாடுவதை முக்கிய பொழுதுபோக்காக கொண்டுள்ளாராம் நயன் தாரா. அடிக்கடி இதற்காக தங்கியிருக்கும் ஃபளாட்டில் கீழே இறங்கி வரும் நயன் தாரா அங்கு இருப்பவர்களுடன் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சண்டை போடுகிறாராம்.

இப்படிதான் ஒரு ஆட்டோ வேகமாக வந்ததை பார்த்து கடுப்பான நயன் தாரா அவரிடம் மோசமாக பேசியுள்ளார், குழந்தைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருவதால் இப்படி நடந்துக்கொள்கிறார் என்றாலும் கூட இது காலணியில் இருப்பவர்களுக்கு அவதியை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளதாம்.
இதனால் பலரும் அபார்ட்மெண்ட் அசோசியேஷனில் இதுக்குறித்து புகாரளித்து வருகின்றனராம்.
