Connect with us

ரெண்டு பிள்ளைக்கு அம்மா ஆன பிறகும் கூட இதை செய்யலாமா? நயன்தாரா முடிவால் ஆடிப்போன ரசிகர்கள்!.

nayanthara

Latest News

ரெண்டு பிள்ளைக்கு அம்மா ஆன பிறகும் கூட இதை செய்யலாமா? நயன்தாரா முடிவால் ஆடிப்போன ரசிகர்கள்!.

தமிழ் சினிமாவில் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க கூடிய நடிகையாக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். படங்களில் கதாநாயகியாகதான் நடிக்கிறார் என்றாலும் கூட அம்மா கதாபாத்திரங்களில் நடிப்பது என்றாலும் அதற்கு ஒப்புக்கொண்டு நடிக்கிறார் நயன்தாரா.

ஜவான் திரைப்படத்தில் மாஸான ஒரு கதாபாத்திரமாக இருந்தபோதும் கூட அதே சமயம் படத்தில் அம்மா கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். எனவே மக்களின் எதிர்பார்ப்பு எப்படியாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல கதாபாத்திரங்களை செதுக்கி நடித்து வருகிறார் நயன்தாரா.

கவர்ச்சி நடிகை:

ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தபோது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதில் நயன்தாராவிற்கு அவ்வளவாக அறிவு இருக்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து கவர்ச்சியாக நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் வில்லு, கஜினி, பில்லா மாதிரியான திரைப்படங்களில் அவர் கவர்ச்சியாக நடித்திருப்பதை பார்க்க முடியும்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகுதான் கவர்ச்சியாக நடிப்பது மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று தந்து விடாது. அதனை தாண்டி நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நயன்தாரா புரிந்து கொண்டார்.

அதற்கு பிறகு வெகுவாக கவர்ச்சியை குறைத்துக் கொண்டார் நயன்தாரா. விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்ட பிறகு திரைப்படங்களில் அவ்வளவாக இவர் கவர்ச்சியாக நடிப்பது கிடையாது. அதேபோல காதல் காட்சி பாடல்களிலும் கூட அதிக கவர்ச்சியாக வர மாட்டார்.

நயன்தாராவின் முடிவு:

இப்படி கவர்ச்சியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிய நயன்தாரா சமீபகாலமாக தொடர்ந்து தோல்விகளை கண்டு வருகிறார். அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறுவதில்லை என கூறப்படுகிறது.  இதனால் மீண்டும் கவர்ச்சியில் இறங்கி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

தற்சமயம் ஒரு வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் நயன்தாரா. இந்த வெப் சீரிஸில் இவருக்கு சூடான படுக்கையறை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் நடிப்பதற்கு நயன்தாராவும் சம்மதம் கூறி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரிஸ் தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு பிள்ளைக்கு அம்மாவான பிறகும் கூட மீண்டும் கவர்ச்சியில் எதற்கு இறங்க வேண்டும் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

divya duraisamy 3
dhanush meena
sasikumar
ttf vasan zoya
To Top