Connect with us

கொழுந்தனார் மீது ஆசை.. பட வாய்ப்புகளையே இழந்த நடிகை.. அட கொடுமையே!..

sangeetha

Tamil Cinema News

கொழுந்தனார் மீது ஆசை.. பட வாய்ப்புகளையே இழந்த நடிகை.. அட கொடுமையே!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் நடிகை சினேகாவின் தோழியும் பிரபலமான நடிகையுமாக இருப்பவர் நடிகை சங்கீதா. சங்கீதா என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் இருந்தாலும் பெரும்பாலும் இவர் தான் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவார்.

பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை சங்கீதா. அந்த திரைப்படம் அளவிற்கு வேறு எந்த திரைப்படமும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை.

90களில் பிரபலம்:

90ஸ் காலகட்டங்களில் பிரபலமான ஒரு நடிகையாக சங்கீதா இருந்து வந்தார். தொடர்ந்து அவர் நிறைய வாய்ப்புகளையும் பெற்று வந்து கொண்டிருந்தார். பெரும்பாலும் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் சங்கீதாவிற்கு கிடைக்கும் என்றாலும் கூட அந்த கதாபாத்திரங்களையும் சிறப்பாக இவர் நடிக்க கூடியவர்.

இவர் நடித்த உயிர், பிதாமகன் மாதிரியான திரைப்படங்களில் கவனத்தை ஈர்க்கும் ஒரு கதாபாத்திரமாக இவர் இருப்பதை பார்க்க முடியும். சினிமாவில் ஓரளவு உயரத்தை தொட்ட பிறகு இவர் சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அது குறித்து நிறைய பேட்டிகளிலும் பேசி இருக்கிறார். பெரும்பாலும் திரைப்பட வாய்ப்புகளுக்காக பெரிதாக போராட மாட்டார் சங்கீதா. தனக்கு என்ன கிடைக்கிறதோ அதில் மட்டும் நடித்துவிட்டு சென்றுவிடுவார் இதற்காக அட்ஜஸ்ட்மெண்டிற்கு செல்வதோ, மற்ற விஷயங்களை செய்வதோ எதையும் அவர் செய்ய மாட்டார்.

ஏனெனில் சினிமா மட்டும்தான் வாழ்க்கை என்று இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் சங்கீதா. சிம்பு நடித்த காளை திரைப்படத்தில் இவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது.

சின்னத்திரையில் பிரபலம்:

இந்த மாதிரி இருபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதேபோல சின்ன தொலைக்காட்சிகளிலும் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 1 நடுவராக இருந்திருக்கிறார்.

அதேபோல ஆர்யாவை வைத்து கலர்ஸ் தமிழில் நம்ம வீட்டு மாப்பிள்ளை என்கிற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை சங்கீதாதான் தொகுத்து வழங்கினார். அவரது பிறந்த வீட்டை பொறுத்தவரைக்கும் அதில் சுமுகமான வாழ்க்கை அவருக்கு இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவரது வீட்டில் அவரது அண்ணனும் அம்மாவும் அவரது பணத்தை பயன்படுத்தி வாழ்ந்து வந்தனர் எனவும் பிறகு அவர்களிடம் விலகிப் வந்த பிறகுதான் வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் நடித்த திரைப்படம் ஒன்று சங்கீதாவிற்கு எளிதாக மார்க்கெட்டை இழக்க செய்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்தது.

உயிர் என்கிற ஒரு திரைப்படத்தில் சங்கீதா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் கதைப்படி சங்கீதாவின் கணவர் தற்கொலை செய்து கொள்வார் அதற்கு பிறகு கணவரின் தம்பியான ஸ்ரீகாந்த் மீது ஆசைப்படுவார் சங்கீதா.

ஸ்ரீகாந்த் வேறொரு பெண்ணின் மீது காதல் வயப்பட்டு இருப்பார். இந்த நிலையில் இவர்களுக்கு இடையே ஒரு வில்லியாக மாறி ஸ்ரீகாந்தை அவர் அடைய விரும்புவதே கதையாக இருக்கும். இந்த படம் படுதோல்வி அடைந்ததுடன் சங்கீதாவிற்கும் கெட்ட பெயரை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார் சங்கீதா.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top