Connect with us

பழகுன பழக்கத்துக்கு கூட சம்பளத்தை குறைக்கலை.. நயனின் சம்பளம் தாங்காமல் த்ரிஷா பக்கம் சென்ற ஆர்.ஜே பாலாஜி..!

trisha rj balaji

News

பழகுன பழக்கத்துக்கு கூட சம்பளத்தை குறைக்கலை.. நயனின் சம்பளம் தாங்காமல் த்ரிஷா பக்கம் சென்ற ஆர்.ஜே பாலாஜி..!

Social Media Bar

ஆர் ஜே பாலாஜி சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான காலகட்டம் முதலே அவரும் விக்னேஷ் சிவனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர் .அவரது நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார்.

இதனால் நடிகை நயன்தாராவும் ஆர்.ஜே பாலாஜிக்கு நெருங்கிய தோழியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்திருந்தது.

நெருங்கிய நண்பர்கள்:

அதில் முதலில் அம்மன் கதாபாத்திரத்தில் சுருதிஹாசன்தான் நடிக்க இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு கதையை கேட்ட விக்னேஷ் சிவன் அதில் நயன்தாராவை நடிக்க வைக்குமாறு கூறினார் அப்பொழுது சுருதிஹாசனிடம் 4 கோடி ரூபாய் தான் சம்பளமாக பேசப்பட்டிருந்தது.

எனவே நயன்தாராவும் அந்த சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டு அந்த திரைப்படத்தில் நடித்த கொடுத்தார். ஆனால் இப்பொழுது நயன்தாராவின் சம்பளம் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் அம்மன் திரைப்படம் ஒன்றை மீண்டும் எடுக்க ஆர்.ஜே பாலாஜி திட்டமிட்டு இருக்கிறார்.

இதற்காக நயன்தாராவிடம் சென்று கேட்ட பொழுது 12 கோடி சம்பளம் வேண்டும் என்று கூறியிருக்கிறார் நயன்தாரா. மொத்த படத்தில் 12 நாட்கள்தான் அம்மன் காட்சிகளை எடுக்கப் போகிறோம் .

சம்பள விஷயத்தில் பிரச்சனை:

ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க வேண்டுமா என்று யோசித்து இருக்கிறார் ஆனால் சம்பள விஷயத்தில் நயன்தாரா எந்த மாற்றமும் செய்து கொள்ளாததினால் தொடர்ந்து நடிகை திரிஷாவிடம் இது குறித்து பேசி இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

திரிஷாவை பொறுத்தவரை கதாபாத்திரத்திற்கு தகுந்தார் போலதான் சம்பளம் வாங்கி வருகிறார். ஒரு கதாபாத்திரம் சிறப்பாக இருந்து அதன் மூலம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றால் குறைந்த சம்பளத்திற்கு கூட அதில் நடித்துக் கொடுப்பார்.

அப்படித்தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனவே அம்மனாக நடிக்க குறைந்த சம்பளத்திற்கு ஓகே என கூறி இருக்கிறார் திரிஷா இதனை தொடர்ந்து அந்த படத்தை சீக்கிரத்தில் துவங்க இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

ஆனால் இப்படி திரிஷாவிடம் கமிட்டானது ஆர்.ஜே பாலாஜிக்கும் நயன்தாராவுக்கும் இருக்கும் நட்பில் விரிசலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

To Top