Connect with us

பறந்துப்போ திரைப்படம் குறித்து முதல் முறையாக நயன்தாரா கருத்து..

Tamil Cinema News

பறந்துப்போ திரைப்படம் குறித்து முதல் முறையாக நயன்தாரா கருத்து..

Social Media Bar

நடிகை நயன்தாரா பொதுவாக தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு கூட பெரிதாக ப்ரமோஷன் எதுவும் செய்ய மாட்டார் என்பது பலரும் அறிந்த விஷயமே.

படத்திற்கான அக்ரீமெண்ட் போடும் பொழுது இசை வெளியீட்டு விழா படத்தின் வெற்றி விழா போன்ற எந்த விழாக்களுக்கும் வரமாட்டேன் என்று விதிமுறை போட்டு தான் கையெழுத்தே போடுவார் நயன்தாரா.

ரஜினிகாந்தோடு நடிக்கும் படமாக இருந்தாலும் கூட படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா வரமாட்டார். அந்த அளவிற்கு ப்ரோமோஷன் மீது ஈடுபாடு இல்லாத ஒருவராக நயன்தாரா இருந்தார்.

இதனால் மற்ற படங்களை கூட அவர் பிரமோஷன் செய்தது கிடையாது. ஆனால் முதன்முதலாக இயக்குனர் ராம் இயக்கத்தில் தற்சமயம் வெளியான பறந்து போ திரைப்படம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருக்கிறார் நயன்தாரா.

அதில் அவர் கூறும் பொழுது வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்றால் உங்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு மலை ஏறுங்கள் இல்லையென்றால் ஏதாவது குளத்தில் சென்று மீன்பிடியுங்கள். அதுவும் இல்லை என்றால் பறந்து போ திரைப்படத்திற்கு உங்கள் குழந்தையோடு செல்லுங்கள்.

அப்பொழுது வாழ்க்கையில் எதை இழந்திருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.

To Top