சிம்பு.. பிரபுதேவா செய்த அட்டூழியங்கள்..! நம்பி ஏமாந்துட்டேன்.. முதல் முறையாக வாய் திறந்த நயன்தாரா..!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகை ஆவார் தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை தனக்கென தனிப்பட்ட பிரைவேட் ஜெட் விமானம் வைத்திருக்கிறார் என்றால் அதுவும் நயன்தாராதான் இந்த அளவிற்கு கோடிகளில் சொத்துக்களை வைத்துள்ள ஒரு நடிகையாக நயன்தாரா இருக்கிறார்.

இந்த உயரத்தை தொடுவதற்கு நயன்தாரா மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் எக்கச்சக்கமான விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார் நயன்தாராவிற்கு தமிழ் சினிமாவில் எவ்வளவு ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு ஹேட்டர்களும் இருக்கிறார்கள்.

நயன்தாரா சொன்ன விஷயம்:

இந்த நிலையில் எப்போதுமே நயன்தாராவை விமர்சிப்பவர்கள் அவரது கடந்த கால காதல் வாழ்க்கையை பற்றி தான் பேசுவார்கள் இந்த விஷயம் குறித்து நயன்தாராவே தற்சமயம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஆவண படத்தில் பேசியிருக்கிறார்.

nayanthara
nayanthara
Social Media Bar

அதில் அவர் கூறும்பொழுது என்னுடைய முதல் காதல் எனக்கு தோல்வியை கொடுத்தது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் அந்த காதல் உருவானது ஆனால் அதற்குப் பிறகு அந்த நம்பிக்கையை காதல் இழந்த பிறகு நானும் அதை விட்டுவிட்டேன்.

ஆனால் என்னை குறித்து விமர்சனம் செய்பவர்கள் எல்லோருமே இப்போது வரை அந்த முதல் காதலை குறித்துதான் பேசுகிறார்கள். இது என்ன யாருக்குமே நடக்காத ஒரு விஷயமா? அதுதான் எனக்கு புரியவே இல்லை.

எப்பொழுதும் என்னை பற்றி எழுதுபவர்கள் எனது முதல் காதலில் இருந்து தான் துவங்குகிறார்கள் என்று கூறியிருக்கிறார் நயன்தாரா. மேலும் தன்னுடைய அடுத்த காதலால் சினிமா வாழ்க்கையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இதனால் இரண்டு வருடங்கள் நான் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன் என்றும் கூறியிருக்கிறார் நயன்தாரா.