Tamil Cinema News
அந்த விஷயம் தெரிந்திருந்தால் ரஜினியோடு நடித்திருக்கவே மாட்டேன்.. பல வருடம் கழித்து உண்மையை கூறிய நயன்தாரா..!
தமிழ் சினிமா நடிகைகளின் டாப் நடிகை என்று கேட்டால் அனைவரும் கூறும் நடிகையாக நயன்தாராதான் இருப்பார். அந்த அளவிற்கு நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிக வருமானம் பெரும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.
தமிழில் ஆண்களில் எப்படி ரஜினி உச்ச கட்ட நடிகராக இருக்கிறாரோ அதேபோல நடிகைகளின் நயன்தாரா இருக்கிறார். அதனால் தான் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர்.
இந்த நிலையில் அவர் முதன் முதலாக ரஜினியுடன் சேர்ந்து நடித்த சந்திரமுகி திரைப்படம் தான் இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு முக்கிய காரணம். அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து ரஜினியுடன் அவர் நடித்ததை ஹைலைட் செய்து காட்டி வந்தார் நயன்தாரா.
நயன்தாரா கூறிய விஷயம்:
அதன் மூலமாக இந்த லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் பெற்றார் அதன் பிறகு சிவாஜி, தர்பார், அண்ணாத்த மாதிரியான நிறைய திரைப்படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் நயன்தாரா.
இந்த நிலையில் அவர் முதன் முதலாக ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சந்திரமுகி திரைப்படத்தில் நடிக்கும் போது ரஜினி அவ்வளவு பெரிய நடிகர் என்று எனக்கு தெரியாது.
படப்பிடிப்புகள் முடிந்த பிறகுதான் ரஜினி பெரிய நடிகர் என்பதை அறிந்து கொண்டேன். ஒருவேளை ஆரம்பத்திலேயே எனக்கு அது தெரிந்திருந்தால் அவருடன் நடிப்பதற்கு எனக்கு பயமாக இருந்திருக்கும். ஒருவேளை நான் அந்த படத்தில் இருந்து கூட விலகி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.