யாராச்சும் தப்பா பேசுனாலும், தப்பா நடந்துக்கிட்டாலும் கூட விடாமல் அதை பண்ணனும்.. மேடையில் பேசிய நயன்தாரா..!

நடிகை நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். ஐயா, சந்திரமுகி மாதிரியான படங்கள் எல்லாம் நயன் தாராவுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தன.

அதனை தொடர்ந்து நயன்தாரா அதிக பிரபலமடைந்தார். இப்போது வரை தமிழ் சினிமாவின் டாப் நடிகையாகவே இருந்து வருகிறார் நயன்தாரா. 10 கோடிக்கும் அதிகமாக இவர் தற்சமயம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா.

என்னதான் தமிழில் டாப் நடிகை என்றாலும் அது எல்லாமே ஒரு வயது வரைக்கும்தான். நடிகைகளுக்கு வயது அதிகமாக அதிகமாக அவர்களுக்கு வாய்ப்புகள் என்பது குறைய துவங்கிவிடும். இதில் நயன்தாரா ஒன்றும் விதிவிலக்கல்ல.

nayanthara
nayanthara
Social Media Bar

எனவே அவர் சில நிறுவனங்களை துவங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். அப்படியாக முக அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் ஃபெமி 9 என்கிற நிறுவனத்தை நயன்தாரா நடத்தி வருகிறார். இதற்காக சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும்போது வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அவை தன்னம்பிக்கை, மற்றும் தன்னையே மதித்தல் ஆகியவை ஆகும். இவை இரண்டும் இருக்கிறது என்றால் உங்களை யாராலும் வீழ்த்த முடியாது.

எவர் ஒருவர் தினசரி கடின உழைப்பை ஒரு மனிதனுக்கு இந்த இரண்டு விஷயங்களையும் கொடுக்கும். அப்படியான மனநிலையில் இருக்கும்போது ஒருவர் நம்மை தப்பா பேசினாலும், தவறாக நடந்துக்கொண்டாலும் மறுநாள் காலை நாம் வழக்கம் போல எழுந்து நமது வேலையை பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார் நயன்தாரா.