Connect with us

பாரிஸ் டவர்கிட்ட போய் எசக்கு பிசக்கா போஸ்.. போட்டோ வெளியிட்ட விக்கி நயன்..!

Tamil Cinema News

பாரிஸ் டவர்கிட்ட போய் எசக்கு பிசக்கா போஸ்.. போட்டோ வெளியிட்ட விக்கி நயன்..!

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான ஸ்டார் நட்சத்திரங்களாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருந்து வருகின்றனர். அதே சமயம் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகும் ஜோடிகளாகவும் இவர்கள் இருவரும் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சியை பயன்படுத்தியிருந்தது தொடர்பாக பிரச்சனை உண்டானது.

இதனை தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அதிக பிரபலமடைந்தனர். இந்த நிலையிலும் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை தொடர்ந்து உலகிற்கு வெளிப்படுத்தும் வகையிலான விஷயங்களை இவர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்சமயம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர். பாரிஸுக்கு சென்று அங்கு நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர் நயன்தாரா விக்கி ஜோடிகள்.

மேலும் அவர்களுடைய குழந்தைகளுடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்து இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

To Top