News
கவர்ச்சியே வேண்டாம்னு சொன்ன நஸ்ரியாவா இது!.. ஷாக் ஆன ரசிகர்கள்!..
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் நடிகைகள் இருந்துக்கொண்டேதான் இருப்பார்கள். உதாரணத்திற்கு தற்சமயம் நடிகை மஞ்சுமா பைஜுவிற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருக்கின்றன அல்லவா.
அதே போல ஒரு காலத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாக நடிகை நஸ்ரியா நசிம் இருந்தார். மலையாளத்தில் இருப்பது போலவே தமிழிலும் இவருக்கு அதிக வரவேற்பு இருந்தது. தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி மாதிரியான திரைப்படங்களில் நடித்தார்.

குழந்தை தனமான அவரது ரியாக்ஷனுக்கு ரசிகர்கள் அடிமையானார்கள் என்றே கூற வேண்டும். இந்த நிலையில் பெரும்பாலும் எந்த படத்திலும் நஸ்ரியா கவர்ச்சியாக நடிக்க மாட்டார்.
கவர்ச்சியாக நடிக்காமலே தன்னால் சினிமாவில் வெற்றி வாகை சூட முடியும் என கூறியிருந்தார் நஸ்ரியா. அதன் பிறகு நடிகர் ஃபகத் ஃபாசிலுடன் திருமணம் ஆன பிறகு சினிமாவை விட்டு விலகினார் நஸ்ரியா நசிம். இருந்தாலும் அவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வம் மட்டும் குறையவில்லை.

இதனையடுத்து பகத் ஃபாசில் நடித்த ட்ரான்ஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார் நஸ்ரியா. அடுத்து சூர்யாவுடன் தமிழிலும் இவர் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நஸ்ரியா ஒரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்த வெப் சீரிஸில் நிறைய கவர்ச்சி காட்சிகள் இருப்பதாகவும் அதில் நடிக்க நஸ்ரியா ஒப்புக்கொண்டதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. இதனை கேட்டு நஸ்ரியாவின் பழைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
