பொசுக்குன்னு மாடர்ன் லுக்குக்கு மாறிய நீலிமா ராணி.. சின்ன இடுப்பில் சொக்க வைக்கும் போஸ்!.
Neelima Rani: தமிழ் வெள்ளித்திரை நாயகிகள் சின்னத்திரையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து எப்பொழுதும் மக்களிடம் ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். அதிலும் முன்னணி நடிகையாக இருந்தவர்கள் எல்லாம் தங்களுடைய மார்கெட் இழந்த பிறகு சின்னத்திரைக்கு வந்து தக்க வைத்துக்கொள்வார்கள். அந்த வகையில் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை வந்தவர் தான் நீலிமா ராணி. இவர் தமிழ் திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக 1992 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் படத்தில் நடித்திருக்கிறார்.
அதன் மூலம் சின்னத்திரையில் பல சீரியல்கள் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சின்னத்திரையில் நீலிமா ராணி
தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கு தோழியாகவும், மற்றும் பல முக்கிய சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நீலிமா ராணி சின்னத்திரையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அதில் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே, இதயம், புதுமை பெண்கள் போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் நீலிமா ராணி
இந்நிலையில் நீலிமா ராணியின் புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது. இதில் நீலிமா ராணி மாடலாக உடை அணிந்து, ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த இவரின் ரசிகர்கள், புகைப்படத்தில் நீலிமா மிக அழகாக உள்ளார் எனவும், அவருக்கு மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.