News
ஸ்னீக் பீக்கே சரியில்லையே? – டி.எஸ்.பி படத்திற்கு குவியும் எதிர் விமர்சனங்கள்!
விஜய் சேதுபதி வெகு நாட்களுக்கு பிறகு போலீசாக நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் டி.எஸ்.பி. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். ஆரம்பக்கட்டத்தில் பொன்ராம் எடுத்த அளவிற்கு இப்போது அவர் எடுக்கும் திரைப்படங்கள் இல்லை என ஏற்கனவே அவர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஆனால் டி.எஸ்.பி திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால் பலரும் அந்த படம் நன்றாக இருக்கும் என நினைக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் ட்ரைலர் வெளியானது. படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படமும் தற்சமயம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி கொண்டுள்ளது.
இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல மாமுலான கதையாகவே படம் இருக்குமோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்னீக் பீக் இருப்பதாக கூறப்படுகிறது.
நகைச்சுவைக்கு சிரிப்பே வரலை. ஸ்னீக் பீக்கே சுவாரஸ்யமாக இல்லையே? என எதிர்மறையான கமெண்டுகள் படத்திற்கு அதிகமாக வந்துள்ளது.
அந்த ஸ்னீக் பீக்கை காண இங்கு க்ளிக் செய்யவும்.
