Connect with us

ஜெயிலர் 2 ல இதுதான் ரூல்ஸ்.. சன் பிக்சர்ஸ்க்கு குண்டை தூக்கி போட்ட நெல்சன்..!

jailer 2

Tamil Cinema News

ஜெயிலர் 2 ல இதுதான் ரூல்ஸ்.. சன் பிக்சர்ஸ்க்கு குண்டை தூக்கி போட்ட நெல்சன்..!

Social Media Bar

நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் சமீபத்தில் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் இருந்தது.

ஜெய்லர் திரைப்படம் வெற்றியாகும் என்பது இந்த பட குழுவே எதிர்பார்த்த ஒரு விஷயம் கிடையாது என்று தான் கூற வேண்டும். படம் வெளியான பிறகு இப்படியான ஒரு வெற்றியை கொடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

அதனை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான திட்டம் போடப்பட்டது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கூலி படத்திற்கு பிறகு துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்சனின் திட்டம்:

jailer 2

jailer 2

இயக்குனர் நெல்சன் ஜெயிலர் திரைப்படத்தையே கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் அதிகமாக படமாக்கினார். லோகேஷ் கனகராஜ் போல சீக்கிரத்தில் திரைப்படங்களை எடுக்கக் கூடியவர் அல்ல நெல்சன்.

இதனால் தற்சமயம் அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு விதிமுறையை போட்டுள்ளார். அதாவது 11 மாதங்கள் படப்பிடிப்புக்காக கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டு இருக்கிறார். ஆனால் 2026 பொங்கலுக்கு இந்த திரைப்படத்தை திரைக்கு கொண்டு வந்து விடலாம் என்பது சன் பிக்சர்ஸின் எண்ணமாக இருந்தது.

ஆனால் நெல்சன் கேட்டுக் கொண்ட காரணத்தினால் தற்சமயம் அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

To Top