News
பின்னணி இசையில் முன்னணி.. யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஒரு படத்திற்கு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று அந்த படத்திற்கு இசை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஒரு படத்தில் வெளிவரும் பாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் அந்தப் படமே வெற்றி அடைந்ததற்கு சமமாக கருதப்படும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்களின் இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்திருக்கும் நிலையில், பெரும்பாலான மக்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா.
இவரின் இசைக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, தமிழ் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இவர் தமிழ் சினிமாவிற்கு ஹிப்பாப் பை அறிமுகப்படுத்தினார்.
இவர் இரண்டு ஃபிலிம் ஃபேர் விருது, 5 மிர்ச்சி மியூசிக் விருது, மூன்று விஜய் விருது, இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றிருக்கிறார்.

மேலும் பிரபல இசை அமைப்பாளர் ஆன இளையராஜாவின் இளைய மகனாக கருதப்படுகிறார். தன்னுடைய 16 வது வயதில் அரவிந்தன் என்ற படத்திற்கு இசை அமைத்து திரைத்துறையில் அறிமுகமானார். இவர் இசையில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி இவரின் இசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் அந்த படத்திற்காக இவர் சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார்.
இசை குடும்பத்தில் இருந்து வந்த யுவன் சங்கர் ராஜா அவரின் மாயக் குரலால் பல ரசிகர்களையும் தன் வசப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளராகவும், பாடகராகவும் தற்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு
தற்போது நடிகர்களைப் போல படத்தின் கதையை க் கேட்டுவிட்டு அதற்கு தகுந்தார் போல் இசையை அமைக்கும் யுவன் சங்கர் ராஜா, ஒரு படத்திற்கு 5 கோடி முதல் எட்டு கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மேலும் தற்போது விஜய் நடித்த படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டு வருகிறது.

மேலும் இவர் ஒய்எஸ்ஆர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். தயாரிப்பு நிறுவனங்கள் மூலமும் இவருக்கு குறிப்பிட்ட அளவிற்கு வருமானம் கிடைக்கிறது.
இந்நிலையில் 10 கோடி மதிப்பில் சொகுசு பங்களா மற்றும் பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களை வைத்திருக்கிறார் .அதிலும் குறிப்பாக மினி கூப்பர் எஸ் போன்ற கார்களை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் இசை அமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா, பல வெளிநாட்டு கச்சேரிகளையும் செய்வதால் இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 125 கோடிகள் வரை இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
