Connect with us

அன்னப்பூரணி படத்தை சரி பண்ணி கொடுங்க… இல்லைனா காசை கொடுங்க.. தயாரிப்பாளருக்கு கெடு கொடுத்த நெட்ஃப்ளிக்ஸ்!..

annapoorani

News

அன்னப்பூரணி படத்தை சரி பண்ணி கொடுங்க… இல்லைனா காசை கொடுங்க.. தயாரிப்பாளருக்கு கெடு கொடுத்த நெட்ஃப்ளிக்ஸ்!..

Social Media Bar

Annapoorani : படம் திரையரங்கில் ஓடியதை விட அதிக காசுக்கு ஓடிடியில் விற்றது என்றால் அது நயன்தாரா நடிப்பில் தற்சமயம் வெளியான அன்னபூரணி திரைப்படம்தான். நயன்தாராவுக்கு மட்டும் பத்து கோடி சம்பளம் கொடுத்து கிட்டத்தட்ட 12 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அன்னபூரணி திரைப்படம் திரையரங்கில் படுதோல்வியை கண்டது.

மொத்தமாகவே திரையரங்கில் ஒரு கோடிக்கு கூட அந்த படம் ஓடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் 19 கோடி ரூபாய்க்கு ஓடிடியில் விற்பனையானது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை வாங்கியது.

வாங்கியதோடு மட்டுமல்லாமல் அந்த படத்தை சில மொழிகளுக்கு டப்பிங் செய்தும் வெளியிட்டது. அப்படியாக ஹிந்தியில் டப்பிங் செய்த பொழுது படம் தொடர்பான சர்ச்சை உருவானது. படத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக வசனங்கள் மற்றும் காட்சிகள் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அந்த படத்தை நீக்கியது.

இந்த நிலையில் தயாரிப்பாளரிடம் பேசிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அந்த திரைப்படத்தில் சர்ச்சைகள் உள்ள காட்சிகளை நீக்கி மீண்டும் உருவாக்கி கொடுக்குமாறும் அதை 12 மணி நேரத்திற்குள் செய்து தராத பட்சத்தில் கொடுத்த 12 கோடியில் இருந்து ஒன்பது கோடியை திரும்ப தர வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஆனால் படத்திற்காக ஓடிடிக்கு போடப்பட்ட அக்ரிமெண்டில் அப்படி எதுவும் குறிப்பிடப்படாத காரணத்தினால் சட்டரீதியாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தால் இதற்கு எந்த வழக்கும் போட முடியாது என்றும் கூறப்படுகிறது. எனவே இனிவரும் திரைப்படங்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் அக்ரிமெண்டிலேயே இது போன்ற சர்ச்சைகள் இருந்தால் அந்த திரைப்படத்திற்கான தொகையை திரும்பத் தர வேண்டும் என்று விதிமுறையை எழுத இருக்கின்றனர்.

To Top