காமெடி நடிகர் படத்தை அதிக காசுக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்… குஷியில் நடிகர் சதீஸ்…

சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த அதே காலகட்டத்தில் சினிமாவில் பெரும் நட்சத்திரமாக வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்தவர் நடிகர் சதீஷ். சதீஷ் உடன் சினிமாவிற்கு வந்த பெருமை சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் சில காலங்களிலேயே கதாநாயகனாக நடிக்க துவக்கி விட்டனர்.

ஆனால் ஆரம்பத்திலேயே சதீஷ் காமெடி நடிகராக நடித்ததால் அவ்வளவு சீக்கிரமாக அவரால் கதாநாயகனாக நடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து ஒரு வழியாக நாய் சேகர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் சதீஷ். அந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தற்சமயம் கான்ஜுரிங் கண்ணப்பன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் சதீஷ். இதில் நடிகை ரெஜினா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Social Media Bar

இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த திரைப்படம் நன்றாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன. இதில் ஆனந்தராஜ் போன்ற முக்கிய நடிகர்கள் இவருடன் சேர்ந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தை ரூபாய் ஒன்பது கோடி கொடுத்து வாங்கியுள்ளது netflix நிறுவனம் பொதுவாக சின்ன படங்களை இவ்வளவு ரூபாய்க்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியது இல்லை. இருந்தாலும் இந்த படத்தை வாங்கி இருப்பதால் சதீஷிற்க்கான பட வாய்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது என்று கூறலாம். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம் நடிகர் சதீஷ்.