அன்னப்பூரணிக்கு பேசுறவங்க எல்லாம் இந்த படத்துக்கு பேசலையே!.. லிஸ்ட் போடும் நெட்டிசன்கள்…

Nayanthara annapoorani movie : தற்சமயம் ஓடிடியில் வெளியாகி ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டதால் நிரந்தரமாக நீக்கப்பட்ட திரைப்படம் அன்னபூரணி. நயன்தாரா நடித்த இந்த திரைப்படம் திரையில் கூட பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

ஆனால் இது தொடர்பாக வட இந்தியாவில் இருந்து வழக்கு தொடர்ந்தபோது படம் மீது மக்களுக்கு ஆர்வம் வர துவங்கியது. ஆனால் இந்த நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அந்த படத்தை ஓடிடியில் இருந்து நீக்கி விட்டது. இந்த திரைப்படம் இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக இதன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

படத்தில் இஸ்லாமியர் ஒருவர் ராமர் கறி சாப்பிட்டார் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. மேலும் பிரியாணி செய்வதற்கு முன்பு ஒரு பிராமண பெண் இஸ்லாமிய முறைப்படி கடவுளை வணங்கி விட்டு கறி சமைப்பதும் மத நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது எனக்கூறி அந்த படத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இது யாவும் இஸ்லாமிய இந்து மதத்திற்கு இடையே உள்ள நல்ல நட்பை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் பார்வையாக இருந்தது. இந்த நிலையில் இது குறித்து தென் இந்தியாவில் இருந்து பல கேள்விகள் எழ துவங்கியுள்ளன.

annapoorani
annapoorani
Social Media Bar

கேரளா ஸ்டோரி, காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்கள் இஸ்லாமியர்களை மோசமாக விமர்சிக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படங்களாக இருந்தன. அந்த திரைப்படத்தை இப்போது வரை எந்த ஒரு ஓடிடியும் நீக்கவும் இல்லை. எந்த ஒரு திரைப்படத்திற்கு தடையும் விதிக்கப்படவில்லை.

ஆனால் இந்த படத்தில் இந்து மதம் குறித்து தவறாக ஏதும் சித்தரிக்கப்படாத போதே எப்படி இந்த படத்தை மட்டும் தடை செய்கிறார்கள். உண்மையிலேயே மீனவர் குகன் கொடுத்த மீனை ராமர் சாப்பிட்டதாக தமிழில் உள்ள கம்பராமாயணத்தில் கூட இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது உண்மையைதான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது அதற்காக எதற்கு படத்தை தடை செய்ய வேண்டும்.

அப்படி என்றால் ஒரு மதத்திற்கு மட்டுமே ஆதரவாக நெட்ஃப்ளிக்ஸ் செயல்படுகிறதா என கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள். இதனையடுத்து மீண்டும் பெரும் பிரச்சனையாகி வருகிறது அன்னப்பூரணி திரைப்படம்.