Tamil Cinema News
இனி பழைய பேன் கார்டு செல்லாதா? அறிமுகமாகும் பேன் 2.0..!
இந்தியாவில் பான் கார்டு என்பது ஒரு அத்தியாவசியமான அடையாள அட்டையாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் வருமான வரி கட்டுபவர்கள் மட்டும்தான் பான் கார்டு வைத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.
ஆனால் இப்பொழுது வங்கி கணக்கு துவங்குவதில் துவங்கி பல விஷயங்களுக்கு பான் கார்டு தேவைப்படுவதால் பொதுமக்களும் கூட பான் கார்டு வாங்கி வைத்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு இ பான் என்கிற முறையை கொண்டு வந்தது.
இதன் மூலமாக எந்த ஒரு நபரும் எளிமையாக இலவசமாகவே தன்னுடைய பேன் கார்டை அப்ளை செய்து வாங்கிக் கொள்ள முடியும். இந்நிலையில் அடுத்ததாக மத்திய அரசு பேன் 2.0 என்கிற ஒரு புது திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது.
புதிய பேன் கார்டு:
இதன்படி இப்பொழுது இருக்கும் பான் கார்டை விடவும் அதிக தொழில்நுட்ப வசதியுடன் கூடிய புது பான் கார்டு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது இந்த பான் கார்டில் வழக்கமான பான் கார்டில் உள்ளது போல 10 இலக்க நம்பர் இருக்காது.
அதற்கு பதிலாக ஒரு கியூ ஆர் கோடு மட்டும்தான் இருக்கும் பாதுகாப்பு பிரச்சனைகளை சரி செய்ய இந்த மாதிரி முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இந்த புது பேன்கார்டு வருவதால் பழைய பான் கார்டு செல்லுபடி ஆகாமல் போகுமா? என்கிற கேள்வி பலருக்கும் இருந்தது.
நிபுணர்கள் கருத்து:
இது குறித்து நிபுணர்கள் கூறும் பொழுது கண்டிப்பாக பழைய பான் கார்டு செயலிழந்து போகாது அதுவும் பயன்பாட்டில்தான் இருக்கும். ஒரு வேளை அந்த பழைய கார்டை புதுகார்டாக மாற்றிக் கொள்ள நினைத்தால் அதற்கு அப்ளை செய்து வாங்கி கொள்ளலாம்.
அதுவுமே விருப்பம் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம் மத்தபடி பழைய பான் கார்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதே சமயம் எதிர்காலத்தில் இந்த புது தொழில்நுட்பத்தை கொண்ட பேன் 2.0 விற்கு தான் வரவேற்பு இருக்கும் எனவே காலப்போக்கில் அனைவரும் அதற்கு மாற வேண்டிய சூழ்நிலை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்