Tamil Cinema News
நித்யா மேனனிடம் அந்த கேள்வி மட்டும் கேட்க கூடாது.. எல்லோரும் பயப்பட காரணம் இதுதான்.!
வெகு காலங்களாகவே தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். ஆரம்பத்தில் தமிழில் நித்யா மேனன் நடித்த திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருக்கான வரவேற்பு அதிகரித்தது.
தமிழில் நித்யா மேனனை அதிக பிரபலமாக்கியது ஓ காதல் கண்மணி திரைப்படம்தான். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கி இருந்தார். பொதுவாகவே மணிரத்தினம் அவரது திரைப்படங்களில் நடிகைகளை மிக அழகாக காட்ட கூடியவர்.
அந்த வகையில் ஓ.கே கண்மணி படத்தில் மிக அழகாக இருந்த நித்யா மேனனுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. மேலும் தமிழ் சினிமாவில் இவரது தனிப்பட்ட நடிப்பும் பாராட்டை பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்சமயம் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அடுத்து தனுஷ் நடித்து இயக்கி வரும் இட்லிகடை திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் எப்போதும் நித்யா மேனனுக்கு பிடிக்காத கேள்வி ஒன்று உண்டு. 36 வயதான பிறகும் கூட இன்னமும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார் நித்யா மேனன்.
அவரிடம் யாராவது ஏன் நீங்கள் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என கேட்டால் நித்யா மேனன் செம கோபமாகிவிடுவாராம். அவரது பெற்றோரே கேட்டாலும் நீங்கள் திருமணம் செய்துக்கொண்டு 100 சதவீதம் சந்தோஷமாக இருக்கிறீர்களா? பிறகு ஏன் என்னை அப்படி கேட்கிறீர்கள் என கூறுவாராம் நித்யா மேனன்.
இதனாலேயே யாருமே அவரிடம் திருமணம் குறித்து மட்டும் கேள்வி கேட்பதே இல்லை.