Connect with us

கமல்ஹாசன் விழாவிற்கு எல்லாம் நான் வர மாட்டேன்!.. என்.டி ராமாராவிற்கே பயம் காட்டிய உலக நாயகன்!..

NT rama rao kamalhaasan

Cinema History

கமல்ஹாசன் விழாவிற்கு எல்லாம் நான் வர மாட்டேன்!.. என்.டி ராமாராவிற்கே பயம் காட்டிய உலக நாயகன்!..

Social Media Bar

Actor Kamalhaasan: ரஜினிகாந்த் போலவே தமிழில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன், நிஜ வாழ்க்கையில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானாலும் கூட சினிமாவில் தொடர்ந்து நல்ல பெயரைதான் பெற்று வந்தார் கமல்ஹாசன்.

100 படங்களை முடிக்கும்போது ஏற்கனவே பெரும் உயரத்தை தொட்டிருந்தார் கமல்ஹாசன். இந்த நிலையில் கமல்ஹாசன் நூறு படங்களில் நடித்ததை ஒரு விழாவாக கொண்டாடலாம் என நினைத்தார் ஏ.வி எம் சரவணன்.

அதற்கு தென்னிந்திய பிரபலங்களை எல்லாம் அழைத்து விழா நடத்தலாம் என முடிவு செய்தார் ஏ.வி.எம் சரவணன். அப்படியாக முதலில் எம்.ஜி.ஆரை அழைக்க சென்றார். எம்.ஜி.ஆர் கேட்ட உடனே வருவதற்கு ஒப்புக்கொண்டார்.

kamal
kamal

அதே போல அப்போதைய ஆந்திர முதலமைச்சராக இருந்த என்.டி ராமாராவையும் அழைத்தனர். ஆனால் அவர் அந்த விழாவிற்கு வர மறுத்துவிட்டார். கமலும் ஸ்ரீதேவியுடன் படம் நடித்து வருகிறார். நானும் நடித்து வருகிறேன். ஆனால் என்னை விட கமலுக்குதான் அதிக வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில் அவரது விழாவிற்கே நான் வந்து எப்படி அவரை வாழ்த்த முடியும் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு பெரும் வரவேற்பை பெற்றவராக அப்போது கமல்ஹாசன் இருந்துள்ளார்.

To Top