News
போரை வச்சும் காசு பார்க்கும் பாலிவுட் சினிமா.. இதெல்லாம் நியாயமா?
தற்சமயம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் சூழல் நிலவி வருகிறது. இன்னமும் இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக போரை அறிவிக்கவில்லை என்றாலும் கூட இரு நாடுகளுமே தாக்குதலை நடத்தி வருகின்றன.
இது மக்கள் மத்தியிலும் கூட பீதியை ஏற்படுத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதல்தான் இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்தது. பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி பஹல்காம் என்னும் பகுதியில் 26 பொது மக்களை கொலை செய்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் உருவானது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் கைபற்றப்பட்ட காஷ்மீர் பகுதிகளில் 9 இடங்களில் தாக்குதலை ஏற்படுத்தினர். இவை யாவும் பயங்கரவாதிகளின் தளம் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாக துவங்கியுள்ளது.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவேயும் இதை வைத்து பணம் சம்பாதிக்க துடியாக துடித்து வருகிறது பாலிவுட் சினிமா. ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரை வாங்குவதற்காக பாலிவுட் சினிமாவில் பெரிய போட்டி நடந்து வருகிறதாம்.
ஏனெனில் ஆபரேஷ சிந்தூரை படமாக எடுத்தால் நன்றாக கல்லா கட்டலாம் என்பது பாலிவுட் தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருக்கிறது. எனவே அந்த பெயரை வாங்குவதற்கு அங்கு பெரிய போட்டி நிலவி வருகிறதாம்
