News
அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும் ஆனாலும்… நடிகை ஓவியா ஓப்பன் டாக்!.
Oviya: தமிழ் சினிமாவில் குறைந்த அளவு படங்கள் நடித்திருந்தாலும், ஒரு சில நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருப்பார்கள். காரணம் அவர்களின் நடிப்பு நடனம் அல்லது அவர்களின் குணாதிசயங்கள் ரசிகர்களுக்கு பிடித்து விடும்.
அந்த வகையில் களவாணி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ஓவியா. இவர் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்தாலும், ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு பேசப்பட்டார்.
இவர் தற்பொழுது சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கூறியிருப்பது சமூக வலைத்தளங்களை பேசுபவராகியுள்ளது.
நடிகை ஓவியா
இவர் மலையாளத்தை பூர்வீகமாகக் கொண்டு கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானார்.
முதல் படத்தில் கிராமத்து பெண்ணாக தனது நடிப்பை தொடங்கிய ஓவியா, அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் மாடர்ன் பெண்ணாகவும், கவர்ச்சி பெண்ணாகவும் நடித்தார். ஆனால் களவாணி படத்திற்கு பிறகு இது போன்ற ஒரு லுக்கில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் பல படங்களின் கதைகளை தேர்வு செய்வதில் ஓவியா தவறவிட்டார். இதனால் அவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லும் படியாக அவருக்கு அமையவில்லை. ஆனால் அடுத்ததாக ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ்- இல் கலந்துகொண்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
பிக் பாஸில் திரை பிரபலங்களே ஓவியாவிற்கு சப்போர்ட் செய்தார்கள். மேலும் தமிழக ரசிகர்கள் அவருக்கு ஆர்மி வரை ஆரம்பித்தார்கள். அந்த அளவிற்கு ஓவியாவின் வெளிப்படையான குணம் அனைவருக்கும் பிடித்தது. இதனால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.
ஆனால் பிக் பாஸ் பிறகு ஓவியாவிற்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக சொல்லும் படியாக அமையவில்லை. எனவே மீண்டும் பழைய நிலையிலேயே ஓவியா தொடர்ந்து வருகிறார்.
அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஓவியா பேச்சு
பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியா, அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அட்ஜெஸ்ட்மெண்ட் சினிமாவில் எல்லா தளங்களிலும் இருக்க செய்கிறது. சினிமாவில் இருக்கும் அனைவரும் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைக்கிறார்கள் என நான் கூறவில்லை. ஆனால் ஒரு சிலர் அவ்வாறு இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.
சினிமா என்பது மற்ற தொழில்கள் போல தான் இதுவும் ஒரு வேலை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் வேறு வேலை தேடி சென்றுவிடலாம். ஆனால் அதை விட்டுவிட்டு அட்ஜஸ்ட்மெண்டுக்கு பணிந்து சென்றால் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் பணிந்து போவது தவறு.
யாராவது அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால் அவர்களின் பெயரை வெளியில் துணிந்து சொல்ல வேண்டும். ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்கள் மற்றவர்களிடம் அதுபோல நடந்து கொள்ள மாட்டார்கள். மேலும் தற்பொழுது சினிமாவில் 18 வயது பெண்கள் வரை நடிக்க வருகிறார்கள்.
சினிமாவிற்கு நடிக்க வரும்போது அவர்களுக்கு எதுவுமே தெரியாது. போகப்போக தான் எல்லாத்தையும் கற்றுக் கொள்வார்கள். மேலும் இவர்கள் நடிக்க வரும் பொழுது அவர்களை பயன்படுத்தி விடுகிறார்கள். ஆனால் தற்பொழுது இருக்கும் பெண்கள் முன்பிருக்கும் பெண்களை விட தைரியமாக இருக்கிறார்கள். இவ்வாறாக ஓவியா தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
