News
ரொம்ப பதட்டமா இருக்கு… இதுபத்தி இன்னும் வீட்ல பேசல… – இயக்குனர் பா.ரஞ்சித்
கடந்த வாரம் திடீரென காணாமல்போன பாண்டிச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, அவரது வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 59 வயது மதிக்கத்தாக்க விவேகானந்தன், 19 வயதுடைய கருணாஸ் என்ற இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரிக்க, சிறுமியை ஒரு வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது புதுச்சேரியில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா ரஞ்சித், பாண்டிசேரி சம்பவத்தை பார்க்கும் போது ரொம்ப எமோஷ்னலாகவும், பதற்றமாகவும் பயமாகவும் இருப்பதாகவும், எனக்கும் வீட்டில் ஒரு பெண் குழந்தை இருக்கு, அதனால் அந்த செய்தியை பார்த்துவிட்டு நான் மிகவும் டிஸ்டப்பாகி விட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுபற்றி இன்னும் வீட்டில் பேசவில்லை எனவும் இது எனக்கு பெரிய பயத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றத்திற்கு ஒட்டுமொத்த சமுதாயம் தான் காரணம் என குற்றம் சாட்டிய அவர், இதற்கு சமுதாயம், அரசியல் கட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் போன்றவை பொருப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஏன் இந்த எண்ணம் தோன்றுகிறது, இந்த எண்ணம் ஏற்பட என்ன காரணம், இந்த எண்ணத்தை எப்படி அழிக்க வேண்டும் என்கிற முறையான பயிற்சி நமக்கு தேவை எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

முறையான கல்வியும்,பகுத்தறிவும் இருந்தால், இது மாதிரியான பிரச்சனையை களைய முடியும் எனவும் அட்வைஸ் செய்துள்ளார்.
