Connect with us

எங்களை தாண்டி யாரும் மெட்ராஸை ஆள முடியாது!.. ஓப்பன் சேலஞ்ச் விட்ட பா.ரஞ்சித்.. எங்க போய் முடிய போகுதோ!..

pa. ranjith

News

எங்களை தாண்டி யாரும் மெட்ராஸை ஆள முடியாது!.. ஓப்பன் சேலஞ்ச் விட்ட பா.ரஞ்சித்.. எங்க போய் முடிய போகுதோ!..

Social Media Bar

Pa. Ranjith: தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களின் படம் தனித்துவமாக தெரியும். அந்த வகையில் இயக்குனர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பதித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இவர் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து எடுத்த மெட்ராஸ் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பிறகு இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா, கபாலி என்ற இரு படங்களை எழுதி இயக்கியிருந்தார். தற்பொழுது இவர் பேரணி ஒன்றில் பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அவரின் வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

முன்விரோதம் காரணமாக இவர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தது. இதற்கு இயக்குனரான பா. ரஞ்சித் தனது கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

armstrong

நேற்று ஜூலை 20ஆம் தேதி நினைவேந்தல் பேரணி ஒன்று நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடத்தப்பட்டது.

இதில் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் கலந்து கலந்து கொண்டு தன்னுடைய கருத்தை கூறினார்.

நாங்கள் ரவுடிகள் தான்

அப்பொழுது பேசிய அவர் திராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய கயல்விழி செல்வராஜ் ஆம்ஸ்ட்ராங் இருந்ததற்கு கூட வந்து பார்க்கவில்லை என்றும், திமுகவில் மேயர் பிரியா இருப்பதால் அவர் மேயர் இல்லை, ரிசர்வேஷன் தொகுதி இருந்ததால் தான் நீங்கள் இன்றைக்கு மேயர் எனவும் காட்டமாக தெரிவித்து இருந்தார்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் இறந்ததற்கு அவரைப் புதைக்க சென்னைக்கு வெளியே இடம் கொடுத்திருக்கிறது திமுக அரசு என்றும், அவருக்கு சென்னையில் ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும் எனவும் கூறினார்.

pa. ranjith

ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட பிறகு பாஜக, திமுக போன்றவர்கள் இணையதளத்தில் ஆம்ஸ்ட்ராங் ரவுடி என எழுதுகிறார்கள். அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பினால் ரவுடிகள் என்பீர்கள் என்றால், நாங்கள் ரவுடிகள் தான் என்றும் சென்னையைக் கட்டி ஆண்ட ஆம்ஸ்ட்ராங் அண்ணனை மீறி சென்னையில் எதுவும் நடக்காது எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

நான் பலமுறை அண்ணன் ஆம்ஸ்ட்ராங் சந்தித்து இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவர் என்னை வன்முறையில் நோக்கி வழி நடத்தியது கிடையாது. இவ்வாறாக பல கருத்துகளை கோவமாக முன் வைத்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top