Cinema History
கமல் சார் கூட பரவாயில்லை.. ஆனால் ரஜினி சாரை பார்க்க முடியலை.. மனம் வருந்திய பார்த்திபன்.!
இயக்குனர் பாக்யராஜ் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர்கள் நிறைய பேர் உண்டு. இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பலரும் அதன் பிறகு நிறைய திரைப்படங்களை இயக்கி பிரபலம் அடைந்துள்ளனர்.
அப்படியான இயக்குனர்களில் பார்த்திபனும் ஒருவர். ஆரம்பம் முதலே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் நடிகர் பார்த்திபன். அதற்குப் பிறகு படம் இயக்கத் துவங்கிய பார்த்திபன் நிறைய திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கினார்.
பெரும்பாலும் பார்த்திபன் அவர் இயக்கும் திரைப்படங்களில்தான் கதாநாயகனாக நடிப்பார். தொடர்ந்து வித்தியாசமான சினிமாவை தமிழ் சினிமாவில் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் இருந்தார் பார்த்திபன்.
அதனாலேயே ஒரு காலகட்டத்தில் பார்த்திபனின் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது குறைய துவங்கிவிட்டது. கமல் ரஜினி மாதிரி பெரிய நடிகர்களுடன் நட்பு இருந்தாலும் கூட இப்பொழுது வரை எந்த நடிகர்களும் பார்த்திபனின் திரைப்படத்தில் நடித்தது கிடையாது.
இந்த நிலையில் இது பற்றி ஒரு பேட்டியில் பார்த்திபன் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது கமல் சார் உடன் கூட எனக்கு நன்றாக பழக்கம் இருக்கிறது. அடிக்கடி கமல் சாரும் நானும் சந்தித்து கொள்வோம்.
ஆனால் ரஜினி சாரை நான் பார்த்தே வெகுநாட்கள் ஆகிறது. முன்பெல்லாம் ஒரு 40 நாட்களுக்கு ஒரு முறையாவது ரஜினி சாரை பார்த்து விடுவேன் ஆனால் இப்பொழுது அவரை பார்ப்பது என்பது மிக கடினமாகிவிட்டது என்று கூறியிருக்கிறார் பார்த்திபன்.
