Cinema History
பணம் கொடுப்பதில் இழுத்தடித்த தயாரிப்பாளர்!.. நாயே என திட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்!.. மனுஷன் ரொம்ப கோபமான ஆளு!..
Tamil Poet Pattukottai kalyana sundaram :தமிழ் சினிமாவில் குறைவான காலங்களே இருந்தாலும் நிறைய அற்புதமான பாடல்களை இந்த சினிமாவிற்கு கொடுத்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ப்ளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்தில் பாடல் வரிகள் எழுதுவது என்பது கொஞ்சம் கடினமான விஷயமாகவே இருந்தது.
ஏனெனில் இப்போது உள்ளது போல யார் வேண்டுமானாலும் ஒரு பாடலுக்கு வரிகளை எழுதி விடலாம் என்கிற நிலை அப்போது இல்லை. கண்டிப்பாக பாடல் வரிகளில் ஓர் கவித்துவம் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயமாக இருந்தது. இதனால் கவிஞர்களால் மட்டுமே பாடல் வரிகளை எழுத முடியும் என்கிற நிலை இருந்தது.
இந்த நிலையில்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பை தேடி வந்தார். சிறந்த கவிநயம் கொண்ட அவர் சிறப்பான பாடல் வரிகளை கொடுத்து வந்தார். ஆனால் ஆரம்பம் முதலே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிகவும் கோபமான ஒரு நபராக இருந்தார்.

ஒருமுறை ஒரு திரையரங்கம் முதலாளியை சந்திக்க சென்ற போது கூட அந்த முதலாளி இவருக்கு எதிரே கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு இவருக்கு அமர நாற்காலி கூட கொடுக்காமல் இருந்தார். இதனால் கடுப்பான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பேப்பரில் மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் என எழுதி அவரிடம் கொடுத்தார்.
இப்படி யாராவது ஒருவர் மீது கோபப்பட்டால் அவரை முகம் கோணும் அளவில் திட்டி விடாமல் அதை காகிதத்தில் எழுதி கொடுப்பதை வழக்குமாக கொண்டிருந்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளர் படத்தில் பாடல் வரிகள் எழுதியதற்கான பணத்தை கொடுப்பதில் மிகுந்த இழுபறி ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

அவரை நேரில் சந்திக்க சென்ற பொழுது இன்று என்னால் பணம் தர முடியாது நீங்கள் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இங்கேயே நின்று கொண்டிருங்கள் என்று கூறிவிட்டார். இதனால் கடுப்பான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வழக்கம் போல ஒரு காகிதத்தை எடுத்து அதில் சில வரிகளை எழுதி தயாரிப்பாளரின் மேஜையில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
பிறகு அதை படித்த தயாரிப்பாளர் ஓடோடி வந்து மீதி பணத்தை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். தாயால் வளர்ந்தேன், தமிழால் அறிவு பெற்றேன் நாயே உன்னை நேற்று நடுத்தெருவில் சந்தித்தேன், நீ யார் என்னை நில் என்று சொல்ல என்பதுதான் அந்த காகிதத்தில் எழுதியிருந்த வார்த்தைகள்.
அந்த அளவிற்கு மிகவும் கோபமான ஒரு நபராக இருந்தாலும் அதே அளவிற்கு திறமை கொண்டானவராகவும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இருந்தார்
