News
என்ன தலைவரே.. டயலாக் எல்லாம் பாட்டுல மட்டும்தானா!.. ரஜினியை கேள்வி கேட்கும் சென்னை மக்கள்!.
தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார் எப்படியும் 150 கோடிக்கு மேல் அவரது சம்பளம் இருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த நிலையில் எந்த ஒரு பிரச்சனை தமிழகத்தில் ஏற்பட்டாலும் அப்பொழுது பெரிதாக நன்கொடை வழங்காத ஒரு நபராக ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார். ஏனெனில் அவருக்கு கொடுக்கும் சம்பளத்துடன் ஒப்பிடும்பொழுது அவர் கொடுக்கும் நிதி என்பது மிக குறைவான அளவிலேயே இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இந்த நிலையில் தற்சமயம் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்ட நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியை மக்களுக்காக அளித்து வருகின்றனர். அதில் முக்கியமாக கலக்கப்போவது யாரு மூலம் புகழடைந்த விஜய் டிவி பாலா தன்னிடம் இருந்த இரண்டு லட்ச ரூபாயை மக்களுக்காக நிதியாக அளித்திருக்கிறார்.
ஆனால் ரஜினிகாந்தை பொறுத்தவரை இப்போது வரை பெரிதாக நிதி என்று ஏதும் அளித்ததாக தகவல்கள் வரவில்லை. இது குறித்து சென்னை மக்கள் கேட்கும் பொழுது என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா என்று பாடினீர்களே தலைவரே இந்த தமிழ் மக்களுக்காக எவ்வளவு நிதி கொடுக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர் இதனை அடுத்து இது குறித்து உருவான மீம்கள் தற்சமயம் சமூக வலைதளங்களில் ட்ரண்டாகி வருகிறது.
