Connect with us

எதிர்நீச்சல் நாடகம் நல்லாவே இல்ல.. கடுப்பான நேயர்கள்.. இப்படியே போனா கஷ்டம்தான்!..

vela rama moorthi sun tv

TV Shows

எதிர்நீச்சல் நாடகம் நல்லாவே இல்ல.. கடுப்பான நேயர்கள்.. இப்படியே போனா கஷ்டம்தான்!..

Social Media Bar

தமிழில் பிரபலமாக உள்ள சீரியலில் முக்கியமான சீரியலாக எதிர்நீச்சல் நாடகம் உள்ளது. நாட்கள் செல்ல செல்ல இந்த நாடகத்திற்கு அதிகமான நேயர்கள் உருவானார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது சீரியலில் வரும் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம்தான்.

ஆதி குணசேகரனாக நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். ஆனால் இடையில் அவர் காலமானதால் அவருக்கு பதிலாக தற்சமயம் வேலராமமூர்த்தி ஆதி குணசேகரனாக களம் இறங்கியுள்ளார். வேலராமமூர்த்தி வருகிறார் என்றதும் முதலில் அதிக வரவேற்பு இருந்தது.

ஆனால் அவர் வந்து நடிக்க துவங்கியது முதல் தற்சமயம் எதிர்நீச்சல் நாடகம் தொடர்பாக எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏனெனில் இதற்கு முன்பு ஆதி குணசேகரனின் கதாபாத்திரம் பெண்களை எவ்வளவு எதிர்த்தாலும் அவர்களிடம் அவர்களை அடிப்பது போன்ற காட்சிகள் இருந்ததே கிடையாது.

அதேபோல மிகவும் அடிமைப்பட்டு கடந்த அந்த குடும்பத்தின் பெண்கள் பெரிதாக வளர்ந்து வருவதற்கான முயற்சிகளை எடுத்து தொடர்ந்து அதில் வெற்றி பெற்று வந்து கொண்டிருந்தனர். இது அனைத்து பெண்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்து வந்தது.

இந்நிலையில் வேலராமமூர்த்தி வந்த பிறகு மீண்டும் அந்தப் பெண்கள் அனைவரும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். திரும்பவும் நாடகம் முதன்முதலில் ஆரம்பித்த போது எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு சென்று விட்டது.

இதனால் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது மீண்டும் முதலில் இருந்து நாடகத்தை தொடங்குகிறார்கள் என்று கூறி எதிர்நீச்சல் நாடகம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர். இப்படியே சென்றால் இன்னும் கொஞ்ச நாளில் எதிர்நீச்சல் நாடகத்தை மக்கள் அதிகமாக பார்ப்பார்களா என்பதே சந்தேகம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

To Top