பொன்னியின் செல்வன் தெலுங்கர்களுக்கான படம் – சர்ச்சையை கிளப்பிய சுஹாசினி

தமிழகமே மாபெரும் எதிர்ப்பார்ப்போடு தற்சமயம் காத்திருக்கும் மிக முக்கியமான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலரும் நடித்துள்ளனர். தமிழகத்தின் பெருமை மிகு மன்னரான ராஜ ராஜ சோழனை கதைநாயகனாக கொண்டு செல்வதால் இந்த படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறது பொன்னியின் செல்வன் அணி. ஏனெனில் இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழர்களின் கதை இந்தியா முழுவதும் வெளியாகிறது என்பதில் மக்களுக்கும் மகிழ்ச்சியே.

இந்நிலையில் படத்தின் இயக்குனரான மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி சமீபத்தில் ஆந்திராவில் நடந்த பொன்னியின் செல்வன் விழாவில் பேசும்போது “பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அதிகப்பட்சம் ஆந்திரபிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலேயே எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொன்னியின் செல்வன் திரைப்படம் தெலுங்கர்களின் படமும் கூட” என கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழர்களின் பெருமையை கூறும் படமாக பார்க்கப்படும்போது அதை தெலுங்கர்களின் படம் என சுஹாசினி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்கள் பலரும் சுஹாசினி அவர்களின் இந்த பேச்சு குறித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

யூ ட்யூப் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Refresh