படம் முழுக்க ஹாலிவுட் லெவல் சண்ட – தள்ளுமாலா பட விமர்சனம்

மலையாளத்தில் பிரபல நடிகரான டொவினோ தாமஸ் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம்தான் தள்ளுமாலா. இந்த படம் தமிழ் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டிருந்தது. இந்த படம் வெளியானது முதலே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வந்தது.

தற்சமயம் இந்த படம் ஓ.டி.டியில் வெளிவந்துள்ளது. படத்தின் கதைப்படி நம் ஹீரோ பெயர் வசிம். வசிம் சரியான கோபக்காரன். சுப்பிரமணியப்புரம் படத்தில் வருவது போல ஊருக்கு முழுவதும் சண்டை செய்து வம்பிழுத்து வைப்பதுதான் வசிம் மற்றும் அவனது நண்பர்களின் வேலையாக இருந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஹீரோவிற்கு, கதாநாயகியுடன் ஒரு இடத்தில் பிரச்சனையாகி பிறகு அதுவே அவர்கள் இருவரும் காதலர்களாக மாறுவதற்கான வாய்ப்பாக அமைகிறது. திருமணம் வரையில் செல்லும் இந்த காதல் திருமணத்தில் தடைப்படுகிறது.

வசிமின் கோபமே இதற்கு காரணமாக உள்ளது. அதன் பிறகு அவர்கள் எப்படி சேருகின்றனர். வசிம் அவனது எதிராளிகளை எப்படி சமாளிக்கிறான் என கதை செல்கிறது. தமிழ் சினிமாவில் யூகிக்க கூட முடியாத அளவில் மிகவும் குறைந்த செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 20 கோடி ரூபாய் செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளது. 72 கோடி ரூபாய்க்கு ஓடியுள்ளது. குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் படம் சிறப்பான அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் திரைக்கதை வித்தியாசமாக அதே சமயம் சிறப்பாக அமைந்துள்ளது. வசிமின் திருமணம் தடைப்படுவதில் இருந்துதான் திரைப்படம் துவங்குகிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் செல்லும் கதை போக போக ஒன்றுடன் ஒன்று இணைந்து பிறகு க்ளைமேக்ஸ் வருகிறது.

டொவினோ தாமஸ் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷினி இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு முயற்சி செய்து இருந்தனர். அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் வருவது போல டொவினோவிற்கு சில சண்டை முறைகள் வைத்திருந்தது சிறப்பு.

படத்தில் பாடல்கள் மற்றும் இசை ஆகியவை ஆவரெஜ் ரகம் என்றே கூறலாம். இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தன. 

கதை ஓட்டத்தில் நடுவே சிறிது மெதுவாக சென்றாலும் கூட இறுதி அரை மணி நேரம் சுறு சுறுப்பாகவே சென்றது. 

Refresh